ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Vignesh Shivan about ajith, vidaa muyarchi: இயக்குநர் விக்னேஷ் சிவனை அனைத்து தரப்பு ரசிகர்களும் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அவர் செய்த காரியம் தான் காரணம்.
ஏ.கே. 62அஜித் குமாரின் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. இது குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. படப்பிடிப்பு துவங்க வேண்டிய ஜனவரி மாதம் விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். தான் படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு அஜித் சார் எந்த வகையிலும் காரணம் இல்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் மேலும் ஒரு காரியம் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.
சிவகார்த்திகேயன்நான் Rajini Sir Style-ல தான் நடிக்கிறேன் – Sivakarthikeyan fantastic speech
விக்னேஷ் சிவன்ஏ.கே. 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் தொடர்ந்து அஜித்தின் புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். அவருக்கு அஜித் மீது எப்பொழுதுமே தனி பாசமும், மரியாதையும் உண்டு. இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாள் அன்று அவரை வாழ்த்தி ட்வீட் செய்தார் விக்னேஷ் சிவன். அவர் கண்டிப்பாக வாழ்த்துவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்படி வாழ்த்துவார் என்று தான் தெரியாது.
Nayanthara: நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, ரஷ்மிகா எது வரை படிச்சிருக்காங்க தெரியுமா?
விடா முயற்சிஅஜித் பிறந்தநாள் அன்று விக்னேஷ் சிவன் ட்விட்டரில் கூறியதாவது, பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். உங்களின் சந்தோஷம் தான் எங்களுக்கு அனைத்துமே. உங்கள் மீதான அளவில்லா அன்பு என்றென்றும் நிரந்தரம். விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் மகிழ்திருமேனி சார், அனிருத் சார், லைகா, சுரேஷ் சந்திரா மற்றும் மொத்த படக்குழு என்றார். மேலும் தான் அஜித்துடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களையும் வெளியிட்டார்.
பாராட்டுவிக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்தவர்களால் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது, உங்கள் சந்தோஷம் தான் எங்களுக்கு எல்லாமுமே என சொல்ல பெரிய மனசு வேண்டும். என்ன மனுஷன்யா இந்த விக்னேஷ் சிவன். அவர் மீதான மரியாதை அதிகரித்துவிட்டது. இப்படி மனதார வாழ்த்திய உங்களின் வாழ்க்கை என்றுமே நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
AR Rahman: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நிறுத்திய போலீஸ்: ஏன்னு பாருங்க
அறிவிப்புவிக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட பிறகு மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்தார்கள். அந்த படத்திற்கு விடா முயற்சி என தலைப்பு வைத்து அஜித் பிறந்தநாள் அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். அந்த அறிவிப்புக்காக தான் அஜித் ரசிகர்கள் பல மாதங்களாக காத்துக் கொண்டிருந்தார்கள். விடா முயற்சி என்கிற தலைப்பு அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
கெரியர்விக்னேஷ் சிவனோ இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படம் இயக்கப் போகிறார். அந்த படத்தில் தன் காதல் மனைவியான நயன்தாராவை நடிக்க வைக்கிறார். இதற்கிடையே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து தயாரித்த ஷுப் யாத்ரா குஜராத்தி மொழி படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.