Nayanthara: மேக்கப்பே இல்ல… சிம்பிள் லுக்கில் மும்பை ஏர்போர்ட்டில் க்ளிக்கான நயன்தாரா!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
நடிகை நயன்தாரா மும்பை விமான நிலையத்தில் மேக்கப் இல்லாமல் செல்லும் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

நயன்தாராதமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. நயன்தாரா தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிக்கட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
​ Vadivelu: மாமன்னன் படத்தில் வடிவேலு கதாப்பாத்திரம் இவ்வளவு கொடூரமானதா? மாரி செல்வராஜ் கொடுத்த ஹின்ட்!​
ஜவான்இதற்காக அடிக்கடி மும்பை சென்று வருகிறார் நடிகை நயன்தாரா. சமீபத்தில் மும்பையில் ஜவான் படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. கப்பலில் காட்சிப்படுத்தப்பட்ட நயன்தாரா மற்றும் ஷாருக்கானின் டூயட் காட்சிகள் இணையத்தில் கசிந்தன. இந்நிலையில் நடிகை நயன்தாரா மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க மும்பை சென்றுள்ளார்.
​ Karthi: ரஜினிக்கு பிறகு நம்ம வந்தியதேவன் கார்த்திக்குதான் அந்த பெருமை… என்ன மேட்டருன்னு பாருங்க!​
காட்டன் எத்னிக் சூட்மும்பை விமான நிலையத்தில் க்ளிக்கான நயன்தாராவின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நயன்தாரா காட்டன் எத்னிக் சூட் அணிந்திருந்தார். மேலும் அதற்குப் பொருத்தமான துப்பட்டா மற்றும் கறுப்பு நிற கூலர்ஸ் மற்றும் கொண்டையுடன் இருந்தார் நடிகை நயன்தாரா. நயன்தாரா மேக்கப் இல்லாமல் இருந்தபோதும் எந்த குறையும் இல்லாமல் அசத்தலாக இருந்தார்.
​ Trisha: குந்தவை த்ரிஷாவின் இந்த போட்டோஸ் பாத்தீங்களா.. வாவ் க்ளிக்ஸ்!​
சிம்பிள் லுக்தனது உடைக்கு ஏற்றது போல் மஞ்சள் நிற ஹீல்ஸ் அணிந்திருந்தார் நயன்தாரா. விமான நிலையத்தில் இறங்கிய நயன்தாரா, போட்டோக்களுக்கு எல்லாம் போஸ் கொடுக்காமல் விறுவிறுவென நடந்து காருக்குள் சென்றுவிட்டார். நயன்தாரா பெரிதாக ஆபரணங்கள் எதுவும் அணியவில்லை. நயன்தாராவின் இந்த சிம்பிள் லுக் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
​ Trisha: பிரம்மாண்டம்… பொன்னியின் செல்வன் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட த்ரிஷா… குவியும் லைக்ஸ்!​
பாலிவுட்டில் அறிமுகம்நயன்தாரா ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் முதல் முறையாக அடியெடுத்து வைக்கிறார். ஜவான் திரைப்படம் இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவுடன், விஜய் சேதுபதி, பிரயா மணி, யோகி பாபு, சுனில் க்ரோவர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.
​ மீண்டும் ‘V’ சென்டிமெண்டில் அஜித்… இதான் காரணம்!​
Nayanthara

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.