சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது ஈரமான ரோஜாவே 2.
அண்ணன் -தம்பிகளின் ஜோடி மாறிய திருமணம் மற்றும் அதன்மூலம் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
காவ்யா மற்றும் ஜீவா இடையிலான காதல் மற்றும் அவர்கள் இருவரும் ஜோடி மாற்றி திருமணம் செய்ததால் ஏற்படும் விளைவுகளை இந்தத் தொடர் கதைக்களமாக கொண்டு எபிசோட்களை ஒளிபரப்பி வருகின்றது.
பிரியா காலில் விழுந்து கதறிய ஜீவா : பார்த்திபன் -காவ்யா, ஜீவா -பிரியா என இரு ஜோடிகள் மற்றும் அவர்களின் ஜோடி மாறிய திருமணம், அதையொட்டிய பிரச்சினைகளை மையமாக கொண்டு விஜய் டிவியின் முக்கியமான தொடராக அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது ஈரமான ரோஜாவே 2 தொடர். இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தன்னுடைய மனைவியின் காதல் குறித்து தெரிந்துக் கொள்ளும் பார்த்திபன், அவர்மீது நம்பிக்கையுடன் பேசுகிறார்.
விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது ஈரமான ரோஜாவே 2 தொடர். இந்தத் தொடரில் ஜீவாவும் காவ்யாவும் காதலிக்க, ஜீவாவின் அண்ணன் பார்த்திக்கும் காவ்யாவின் அக்கா பிரியாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்தின்போது பிரியா கடத்தப்பட, ஜோடி மாறி, பார்த்திக்கும் காவ்யாவிற்கும் திருமணம் நடைபெறுகிறது. தொடர்ந்து பிரியாவை காப்பாற்றி அழைத்துவரும் ஜீவாவிற்கும் பிரியாவிற்கும் திருமணம் நடைபெறுகிறது.
இதையடுத்துதான் கதையில் முக்கியமான கட்டமே வருகிறது. அண்ணன் பார்த்தியை திருமணம் செய்யும் காவ்யா, ஜீவாவை மறக்க முடியாமல், பார்த்தியுடனும் சேர முடியாமல் தவிக்கிறார். அதேநிலைமைதான் ஜீவாவிற்கும் ஏற்படுகிறது. இதையடுத்து இரு ஜோடிகளும் ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டு, பல்வேறு கட்ட பிரச்சினைகளை தொடர்ந்து பார்த்தியை காவ்யா ஏற்றுக் கொள்கிறார். இதனிடையே ஜீவா -காவ்யா காதலை சபையில் அனைவர் முன்னிலையிலும் பார்த்தியின் அத்தை வெளிப்படுத்த வெடிக்கிறது சர்ச்சை.
ஆனால் காவ்யாவை புரிந்த கணவனாக கெத்து காட்டுகிறார் பார்த்தி. தன்னுடைய மனைவி, தங்கமானவள் என்றும் அப்பழுக்கில்லாதவள் என்றும் யார் என்ன சொன்னாலும் அவளை தன்னால் வெறுக்க முடியாது என்றும் கூற, மூக்கறுபடுகிறார் அத்தை. இதையடுத்து பார்த்தி -காவ்யா ஜோடி சுமூகமாக இணைகிறது. ஆனால் ஜீவாவின் இந்தக் காதல் குறித்து அறிந்துக் கொள்ளும் பிரியா, அவரை வெறுத்து ஒதுக்கிறார்.
ஜீவாவின் காதல்கூட தன்னை பாதிக்கவில்லை என்றும், காவ்யா கஷ்டப்பட்டால், ஜீவாவும் கஷ்டப்பட்டு, தன்னையும் கஷ்டப்படுத்தியதாகவும், அவள் சிரித்தால் ஜீவாவும் சிரித்து தன்னிடம் சிரித்ததாகவும் இப்படிப்பட்டவரை தான் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்புகிறார் பிரியா. இதையடுத்து அவரிடம் மண்டியிட்டு தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சுகிறார் ஜீவா. ஆனால் கொஞ்சமும் இரக்கமில்லாமல் அவரது காதலை நிராகரிக்கிறார் பிரியா.
தற்போது முழுமையாக பிரியா மீது காதலில் உள்ளார் ஜீவா. தன்னுடைய காதலை புலப்படுத்த அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் தவிடுப்பொடியாகிறது. தொடர்ந்து அவர் பிரியாவிற்கு தன்னுடைய உண்மையான காதலை எப்படி புலப்படுத்தி, அவருடன் இணைந்து வாழ்வார் என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்களும் காத்திருக்கின்றனர். அவர்கள் விரைவில் இணைய வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாகவும் உள்ளது.