ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Rashmika Mandanna: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பேரழகி த்ரிஷா, நேஷனல் கிரஷ் ரஷ்மிகா ஆகியோர் என்ன படித்திருக்கிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.
நயன்தாராகோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. அவர் முறையாக படிப்பை முடித்த பிறகே நடிக்க வந்தார். கேரளாவில் இருக்கும் கல்லூரி ஒன்றில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறார் நயன்தாரா. தன் கடின உழைப்பால் லேடி சூப்பர் ஸ்டாராகியிருக்கிறார். அவர் படம் ஒன்றுக்கு ரூ. 5 கோடி வாங்குகிறார். நயன்தாரா நல்ல அழகி மட்டும் அல்ல நடிகையும் கூட. கொடுத்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவதற்கு பெயர் போனவர்.
பாரதிராஜாவைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா!
த்ரிஷா20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார் த்ரிஷா. நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே இன்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்கிறார். சொல்லப் போனால் அழகு கூடியிருக்கிறது. சென்னையில் இருக்கும் சர்ச் பார்க் பள்ளியில் படித்தார். பின்னர் பிபிஏ பட்டம் பெற்றார் த்ரிஷா. மிஸ் சென்னை பட்டம் வென்ற பிறகு நடிகையாகிவிட்டார்.
சமந்தாNaga Chaitanya: வாழ்க்கையின் மிகப் பெரிய வருத்தம்: சமந்தா சொன்ன அதே பதிலை சொன்ன நாக சைதன்யாபல்லாவரத்து பெண்ணான சமந்தா பி.காம். படித்தவர். நன்றாக படிக்கக்கூடியவர் தான் என்றாலும் நடிப்பு மீதான ஆசையில் திரையுலகிற்கு வந்தார். தன் திறமையை மட்டுமே நம்பி வந்த சமந்தா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரை தேடி பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்மிகாகர்நாடக மாநிலத்தில் இருக்கும் குடகு மாவட்டத்தை சேர்ந்த ரஷ்மிகா மந்தனா நேஷனல் கிரஷ்ஷாக இருக்கிறார். நடிக்க வருவதற்கு முன்பு பி.ஏ. படித்திருக்கிறார். அவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். தனக்கு பிடித்த நடிகரான விஜய்யுடன் சேர்ந்து வாரிசு படத்தில் நடித்த சந்தோஷத்தில் இருக்கிறார் ரஷ்மிகா.
AR Rahman: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நிறுத்திய போலீஸ்: ஏன்னு பாருங்க
சாய் பல்லவிநம்ம கோத்தகிரி பெண்ணான சாய் பல்லவி ஒரு டாக்டர். வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு நாடு திரும்பியவருக்கு நடிப்பு, டான்ஸ் மீதான ஆர்வம் அதிகரிக்கவே நடிகையாகிவிட்டார். மலையாள படமான பிரேமம் தான் சாய் பல்லவியை பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாக வைத்தது. தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் பிசியாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர். ஃபேஷன் டிசைனிங் படித்த நிலையில் அவர் நடிகையானார். நடிக்க வந்த பிறகும் கூட ஃபேஷன் டிசைனராகிவிடலாம் என்கிற ஐடியாவில் இருந்ததாக கீர்த்தி தெரிவித்தார். கீர்த்தியின் உடை தேர்வு எப்பொழுதுமே சிறப்பாக இருக்க அவரின் படிப்பு காரணம்.
ப்ரியா பவானி சங்கர்சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து வெற்றி கண்டவர் ப்ரியா பவானி சங்கர். அவர் சென்னையில் இருக்கும் கல்லூரி ஒன்றில் என்ஜினியரிங் படித்தவர். என்ஜினியர்கள் நினைத்தால் எந்த வேலையும் செய்யலாம், அதில் வெற்றியும் பெறலாம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார். கல்லூரியில் படித்தபோது ராஜ்வேலை காதலித்தார். அந்த காதல் இன்று வரை தொடர்கிறது.
அதிதி ஷங்கர்கார்த்தியின் விருமன் படம் மூலம் நடிகையாகிவிட்டார் அதிதி ஷங்கர். அப்பா ஆசியுடன் வந்த அவரின் கெரியர் படுவேகமாக பிக்கப்பாகிக் கொண்டிருக்கிறது. அதிதி ஒரு டாக்டர். எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற அவர் தன் அப்பா வழியில் கலை சேவை செய்ய வந்துவிட்டார். முதல் படத்திலேயே தன் அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.