வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன் : மத சுதந்திர மீறல்களில் ஈடுபட்டுள்ள இந்திய அரசு அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படி, அமெரிக்க அரசுக்கு, அந்நாட்டைச் சேர்ந்த அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் என்ற அமைப்பு, உலகெங்கும் உள்ள மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
இது, இந்த அறிக்கையை அந்நாட்டின் வெளியுறவுத் துறையிடம் சமர்ப்பிக்கும். ஆனால், அந்த அறிக்கை அமெரிக்க அரசைக் கட்டுப்படுத்தாது. கடந்த, 2020ல் இருந்து வெளியிடப்படும் இந்த அறிக்கைகளில், இந்தியாவில் மத சுதந்திரம் மீறப்படுவதாக இந்த அமைப்பு குறிப்பிட்டு வருகிறது. இதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த அறிக்கைகள் குறித்து, அமெரிக்க அரசு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ‘இந்த அறிக்கை, இந்தியா குறித்த சரியான புரிதல்கள் இல்லாமல், ஒரு சிலரை திருப்திபடுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் கோட்பாடு’ என, மத்திய அரசு தரப்பில் கடந்த ஜூலையில் கடுமையாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள, 2022ம் ஆண்டுக்கான அறிக்கையிலும், இந்தியாவில் மத சுதந்திர மீறல்கள் உள்ளதாக அந்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க வாழ் இந்தியர்அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement