சண்டைக் காட்சியில் டூப் போடாமல் அந்தரத்தில் பறந்த லட்சுமி மஞ்சு
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தெலுங்கு, தமிழ், மலையாளம் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் தயாராகி வரும் பெயரிடப்படாத ஒரு ஆக்சன் படத்தில் அவர் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஒரு அதிரடி சண்டை காட்சியில் நடித்த லட்சுமி மஞ்சு டூப் போடாமல் அந்தரத்தில் பறந்த படி நடித்துள்ளார். இப்படி டூப் போடாமல் துணிச்சலாக ஆக்சன் காட்சியில் அவர் நடித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் தற்போது தனது தந்தை மோகன் பாபு வுடன் அக்னி நட்சத்திரம் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்கள் லட்சுமி மஞ்சு. அப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.