வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள இந்தியா Vs பாகிஸ்தான் ஆசியக் கோப்பை தொடர் ரத்தாக வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் – இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முட்டிய சர்ச்சை
6 அணிகள் கலந்து கொள்ளும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், இது தொடர்பாக பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, 2023ம் ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாடு என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், பொது இடத்தில்தான் இந்தியா – பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படும் என்று பேசினார்.
ஆனால், ஜெய்ஷாவின் இந்த கருத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதன் பிறகு இந்தப் பிரச்சினையில் கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் தலையிட்டு கூட்டம் ஒன்றை நடத்தினர்.
ஆனால், இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம் என்று இந்தியாவும், பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் நடத்திய ஆக வேண்டும் என்று பாகிஸ்தான் விடாப்பிடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டது. இதனால், இக்கூட்டத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்தியா Vs பாகிஸ்தான் ஆசியக் கோப்பை ரத்தாக வாய்ப்பு?
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்தியே ஆக வேண்டும் என்றும், இந்த முடிவில் பின்வாங்கப்போவதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதியாக தெரிவித்துள்ளது.
மேலும், பொதுவான இடத்தில் விளையாடும் யோசனையே வேண்டாம் என்று பிசிசிஐ நிராகரித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ஆசிய கோப்பை தொடர் ரத்தாக வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், இதற்கு பதிலாக 5 நாடுகளை உள்ளடக்கிய தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.