ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
விக்ரம் படத்தின் வெற்றி கமலுக்கு எந்தளவு உதவியதோ அதே போல நடிகர் சூர்யாவிற்கும் உதவியது என்றுதான் சொல்லவேண்டும்.ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வெறும் ஐந்தே நிமிடங்கள் தான் நடித்திருந்தார் சூர்யா. நடித்தது ஐந்து நிமிடமாக இருந்தாலும் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை சூர்யா ஏற்படுத்தியதன் விளைவாக அவரை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதன் மூலம் சூர்யா அடுத்தடுத்து நடித்து வரும் படங்களின் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. தற்போது இருக்கும் பான் இந்திய சீசனில் சூர்யாவும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும்
பான் இந்திய படத்தில் நடித்து வருகின்றார். சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் படத்தில் நடித்து வருகின்றார் சூர்யா.
சிறுத்தை சிவா சூர்யாவை இயக்குகிறார் என்றவுடன் இப்படம் கண்டிப்பாக மாஸ் கமர்ஷியல் படமாகத்தான் இருக்கும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் வரலாறு சம்மந்தப்பட்ட கதைக்களத்தில் 3D தொழில்நுட்பத்தில் மிகப்பிரமாண்டமாக ஒரு படைப்பை உருவாக்கி வருகின்றார் சிவா.
கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்ததால் கங்குவா படத்தின் வெற்றியின் மூலம் அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இருக்கின்றார் சிவா. சமீபத்தில் இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா கங்குவா படத்தை பற்றி பல விஷயங்களை பேசினார். அதில் குறிப்பாக கங்குவா படத்தின் டீசர் ஜூன் மாதம் வெளியாகும் என தெரிவித்தார். மேலும் கங்குவா படத்தின் டீசரில் இந்திய சினிமாவில் இருக்கும் சூப்பர்ஸ்டார் நடிகர்களின் குரலை பயன்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார் ஞானவேல் ராஜா.
தமிழிலும் ஒரு முன்னணி நடிகர் டீஸருக்காக வாய்ஸ் ஓவர் தர இருப்பதாகவும் கூறிய ஞானவேல் ராஜா, அந்த நடிகர் யார் என குறிப்பிடவில்லை. தற்போதே அந்த நடிகரின் பெயரை கூறிவிட்டால் சஸ்பென்ஸ் இருக்காது என்றார் ஞானவேல் ராஜா.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்காக உலகநாயகன் கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுத்ததை போல இப்படத்திலும் ஒரு முன்னணி நட்சத்திரம் வாய்ஸ் ஓவர் கொடுக்க இருக்கின்றார். அநேகமாக அது உலகநாயகன் கமலாகத்தான் இருக்கும் என சில ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.
விக்ரம் படத்தில் காமலுக்காக சூர்யா நடித்ததை போல கங்குவா படத்தில் சூர்யாவிற்காக
கமல்
இதனை செய்வார் என கூறி வருகின்றனர் ரசிகர்கள். என்ன இருந்தாலும் கங்குவா டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.