Ponniyin Selvan 2: ஒரே ட்வீட்டில் விஜய் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த இளம் நந்தினி

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Sara Arjun Twitter: சாரா அர்ஜுன் ட்விட்டரில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

​சாரா​Samantha: டார்ச்சர் அனுபவிக்கும் சமந்தா: பரிதாபப்படும் ரசிகர்கள்ஏ.எல். விஜய் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத் திருமகள் படம் மூலம் கோலிவுட்டுக்கு குழந்தை நட்சத்திரமாக வந்தவர் சாரா அர்ஜுன். முதல் படத்திலேயே தன் அபாரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு சைவம் படம் மூலம் மீண்டும் தன்னை பற்றி பேச வைத்தார். தமிழ் தவிர்த்து இந்தி, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார் சாரா. இந்நிலையில் தான் பொன்னியின் செல்வன் படத்தில் இளம் வயது நந்தினியாக நடிக்க சாராவை தேர்வு செய்தார் மணிரத்னம். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
வைரமுத்துவைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா!
​நந்தினி​பொன்னியின் செல்வனை விட அதன் இரண்டாம் பாகத்தில் தான் சாரா அர்ஜுனுக்கு கூடுதல் காட்சிகள் இருந்தது. நந்தினியாகவே மாறி சிறப்பாக நடித்திருந்தார். அழகு மற்றும் மெழுகுச் சிலை மாதிரி இருந்தார் சாரா என படம் பார்த்த அனைவரும் தெரிவித்தார்கள். இளம் வயது ஐஸ்வர்யா ராயாக நடிக்க சாராவை விட வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள் என விமர்சனம் எழுந்தது.
​விஜய்​இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சாரா அர்ஜுன் ட்விட்டருக்கு அண்மையில் தான் வந்தார். தான் நந்தினி கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மணிரத்னத்துக்கு நன்றி தெரிவித்தார். இதையடுத்து தான் தளபதி விஜய்யுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு மில்லியன் டாலர் புகைப்படம் என தெரிவித்தார்.

​விக்ரம்​அஜித் பிறந்தநாள் அன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்தார். இதையடுத்து விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் ஆதரவை பெற்றுவிட்டார் சாரா. நிலாவாக கோலிவுட் வந்தவர் தற்போது நந்தினியாகிவிட்டார். தான் சீயான் விக்ரமுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அதை பார்த்த விக்ரமோ, உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது என்றார்.

​சங்கீதா விஜய்​தான் சங்கீதா விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் சாரா. அதை பார்த்த ரசிகர்களோ, செம க்யூட், இதெல்லாம் எப்பொழுது எடுத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பேபி சாரா அதற்குள் வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்டார் என்றே அனைவரும் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
​ஐஸ்வர்யா ராய்​பேபி சாராவும், ஐஸ்வர்யா ராய் பச்சனும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் தான் அனைவரையும் கவர்ந்துவிட்டது. நந்தினியுடன் நந்தினி என சாரா தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் ஐஸ்வர்யா ராயின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
​பொன்னியின் செல்வன் 2​மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் பார்த்த அனைவரும் விக்ரம் மற்றும் ஐஸ்வர் ராயின் நடிப்பை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த படம் உலக அளவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்துள்ளது. முதல் பாகம் ரூ. 500 கோடி வசூலித்தது. இதையடுத்து பொன்னியின் செல்வன் 2 படம் ரூ. 1000 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிலீஸான 5 நாட்களில் ரூ. 250 கோடி வந்திருக்கிறது என்றால் நிச்சயம் ரூ. 1000 கோடி வசூல் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

​Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 ப்ரொமோஷனுக்கு கூப்பிடலயா?: உண்மையை சொன்ன சரத்குமார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.