இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்தியவிமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌதாரி, நேற்று (02) கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
அதன்படி, கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌதாரி கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்கப்பட்டதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இந்திய விமானப்படைத் தளபதியை அன்புடன் வரவேற்று, கடற்படையின் மேலாண்மை வாரியத்தை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இந்திய விமானப்படைத் தளபதி மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி ஆகியோருக்கு இடையில், இரு நாடுகளின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் நீண்ட கால நட்புறவு தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ளப்பட்டன. இருதரப்பு கலந்துரையாடலின் பின்னர் இந்தச் சந்திப்பைக் குறிக்கும் வகையில் இருவருக்கு இடையே நினைவுச் சின்னங்கள் பரிமாற்றமும் நடைபெற்றது.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், இந்திய விமானப்படைத் தளபதி ஏயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி, இலங்கை கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை மேலாண்மை வாரியம் ஆகியோரிடம் ஒரு குழு புகைப்படத்திற்கு கழந்துகொன்டுள்ளார். அதன் பின்னர், அவர் கடற்படை தளபதி அலுவலகத்தில் உள்ள சிறப்பு விருந்தினர்கள் நினைவு புத்தகத்திலும் ஒரு குறிப்பு செய்துள்ளார்.