Chiyaan Vikram: தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் விபத்து.. விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்ததாக தகவல்

சென்னை: பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரமோஷனுக்காக சியான் விக்ரம் சக நடிகர்களுடன் கடந்த 20 நாட்களாக நாடு முழுவதும் டூர் அடித்து வந்தார்.

இந்நிலையில், மீண்டும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இன்று மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்து விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆதித்த கரிகாலனாக அசத்தல்: பொன்னியின் செல்வன் 2 படத்தில் சியான் விக்ரம் வரும் ஒவ்வொரு சீனும் தெறி மாஸாக இருந்தது. கடம்பூர் மாளிகையில் குதிரையில் சுற்றிக் கொண்டே வசனம் பேசி அனைவரையும் மெர்சலாக்கும் அந்த ஒரு காட்சியும் ப்ரீ கிளைமேக்ஸில் ஐஸ்வர்யா ராயிடம் காதல் பொங்க பேசி கடைசியில் காதலி நந்தினி மீது கொலைப்பழி விழக்கூடாது என்பதற்காக தன்னைத் தானே குத்திக் கொள்கிறார் ஆதித்த கரிகாலன் என அந்த கதாபாத்திரத்துக்கே மணிரத்னம் வெயிட்டேஜை கூட்டியிருந்தார்.

Chiyaan Vikram getting severe injury on his back at Thangalaan shooting spot

அந்த படத்தின் ப்ரமோஷனுக்காக கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி என படக்குழுவினர் உடன் செம அரட்டை அடித்து வந்தார் சியான் விக்ரம்.

தங்கலான் ஷூட்டிங் ஆரம்பம்: பொன்னியின் செல்வன் 2 ப்ரமோஷனுக்காக நிறுத்தப் பட்டிருந்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் பா. ரஞ்சித் இன்று மீண்டு தொடங்கி உள்ளார்.

அதற்காக ஒல்லி பெல்லியாக தயாராகிறேன் என நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் செம்ஃ ஒல்லியான இடுப்பைக் காட்டி வீடியோவையும் போட்டோவையும் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில், படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது.

Chiyaan Vikram getting severe injury on his back at Thangalaan shooting spot

விலா எலும்பு முறிவு: சியான் விக்ரம் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளை பா. ரஞ்சித் இயக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சிறிய விபத்துக் காரணமாக கீழே விழுந்து அடிப்பட்டதில் அவரது விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிலர் பெரிய அடி இல்லை என்றும் லேசான காயம் என்று கூறினாலும், ஒரு மாத கால ஓய்வில் சியான் விக்ரம் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவித்து இருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சினிமாவுக்காக உடல் பொருள் ஆவி என அனைத்துமே கொடுத்து நடித்து வரும் சியான் விக்ரம் தங்கலான் படத்திற்காக எந்தளவுக்கு கஷ்டப்பட்டு நடித்து வருகிறார் என்பது அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அந்தவொரு மேக்கிங் க்ளிம்ஸே சாட்சியாக அமைந்தது.

இந்நிலையில், சியான் விக்ரம் சீக்கிரம் குணமாகி பழையபடி ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இயக்குநர் கெளதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்திற்கும் ஒரு 10 நாள் கால்ஷீட் கேட்டிருந்த நிலையில், இன்னும் ஒரு மாத காலத்திற்கு நடிகர் சியான் விக்ரம் எந்தவொரு படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்வது சிரமம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.