லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் துப்பாக்கி தோட்டாக்களை வீசிய விவகாரத்தில் கைதான நபரின் பையில் என்ன இருந்தது என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மன்னரை கொல்லப் போகிறேன்
சார்லஸ் மன்னர் முடிசூட்டும் விழாவிற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளது. இந்த நிலையில், செவ்வாய்கிழமை இரவு 7 மணியளவில் அரண்மனை வாயில் அருகே அதிகாரிகள் ஒருவரை கைது செய்ததாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
Credit: uknip
குறித்த நபரை சோதனைக்கு உட்படுத்தியதில், அவரிடம் கத்தி ஒன்று காணப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னர் ஒருமுறை, அரண்மனை அருகே காணப்பட்ட அந்த நபர், மன்னரை கொல்லப் போகிறேன் என கூச்சலிட்டதகாவும் கூறுகின்றனர்.
தற்போது அரண்மனை வாசலில் இருந்து, உள்ளே துப்பாக்கி தோட்டாக்களை அவர் வீசியுள்ளதாக கூறுகின்றனர்.
சம்பவம் நடக்கும் போது ராஜ குடும்பத்து உறுப்பினர்கள் எவரும் அரண்மனையில் இல்லை என்றே கூறப்படுகிறது.
Credit: Thesun
இந்த நிலையில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பில் பொலிசார் கடும் விமசனத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.
மேலும் அந்த நபர் வைத்திருந்த பையில் இரண்டு கடவுச்சீட்டுகள், மொபைல்போன் ஒன்று, பணப்பை, சாவி, வங்கி அட்டைகள் மற்றும் மடிக்கணினி உறை ஒன்றும் அவரிடம் இருந்துள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்
கைதான அந்த நபர் 30 வயதை கடந்தவர் எனவும் கடந்த சில நாட்களாக அரண்மனை பகுதியில் வட்டமிட்டு, மன்னரை கொல்லப் போகிறேன் என கூச்சலிட்டு வந்துள்ளார் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Credit: LNP
இதனிடையே, நேற்று இரவு திட்டமிட்டபடி முடிசூட்டு விழா ஒத்திகை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தை தனியான மனநலம் பாதிக்கப்பட்டவரால் ஏற்பட்ட சம்பவமாக பொலிஸார் கருதியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த நபரிடம் காணப்பட்ட கடவுச்சீட்டுகள் மற்றும் மொபைபோன் உட்பட அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றே கூறுகின்றனர்.
@getty