இந்திய சினிமாவுக்கு இன்று 110 வயது

இன்றைய மக்களின் முக்கிய பொழுதுபோக்காக விளங்குவது சினிமா. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் சினிமா என்ற கலையை ரசித்து வருகிறார்கள். லட்சோப லட்சம் பேருக்கு அது வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட இந்திய சினிமாவுக்கு இன்று வயது 110.

1913ம் ஆண்டு இந்தியாவின் முதல் திரைப்படமாக மௌனப் படமாக 'ராஜா ஹரிச்சந்திரா' படம் 1913ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி பம்பாய் நகரில் காரோனேஷன் சினிமா என்ற அரங்கில் திரையிடப்பட்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முழு முதல் நீள சினிமா அதுதான்.

பழங்காலத்தில் இந்தியாவை ஆண்ட ராஜா ஹரிச்சந்திரா என்ற மன்னரின் கதையைச் சொல்லும் படமாக அப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்தியத் திரையுலகத்தின் பிதாமகன் என்றழைக்கப்படும் தாதாசாகேப் பால்கே தயாரிப்பு இயக்கத்தில் சுமார் 40 நிமிடங்கள் ஓடக் கூடிய அளவில் உருவான படம். டிடி தாப்கே, பிஜி சானே உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

அப்படி ஆரம்பமான இந்திய சினிமா இன்று ஐமேக்ஸ், 4 கே என உலகின் நவீன தொழில்நுட்பங்களுடன் பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கிறது. இந்தியா முழுவதும் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்கள், வருடத்திற்கு 3000 படங்கள், சுமார் 20 ஆயிரம் கோடி வியாபாரம் என உலக சினிமா வரைபடத்தில் இந்தியாவிற்கும் முக்கிய இடம் உண்டு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.