புதுடில்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜ., எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து டில்லியில் தொடர்ந்து 11வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு சக வீரர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர். இப்போராட்டம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா சமீபத்தில், ‘மல்யுத்த வீரர்கள் தெருக்களில் போராட்டம் நடத்தக் கூடாது, அவர்கள் செய்தது விளையாட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. இது ஒரு எதிர்மறையான அணுகுமுறை’ என கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு போராட்டம் நடத்தும் வீரர்கள், வீராங்கனைகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், பி.டி.உஷா இன்று (மே 3) போராட்டம் நடத்தும் வீராங்கனைகளை நேரில் சந்தித்து பேச்சு நடத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement