ரூபகலாவை தோற்கடியுங்கள் கணவர் பேசியதாக பரபரப்பு| Defeat Rupakala husband said sensational

தங்கவயல் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ரூபகலா. இவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது கணவர் சசிதர், கர்நாடக விதான் சவுதாவில், புள்ளியல் துறை இயக்குனராக உள்ளார்.

இந்நிலையில், ‘என் மனைவியை தோற்கடியுங்கள்’ என்று இவர் பேசியதாக ஆடியோ ஒன்று நேற்று முன்தினம் வெளியானது. இதைக் கேட்ட, சசிதரின் நண்பர் ஒருவர், சசிதரிடம் கூறி உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். அங்கிருந்து சைபர் கிரைம் போலீசுக்கு அனுப்பி, விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

புகாரில், ‘என் மனைவியை தோற்கடியுங்கள் என்று யாரிடமும் கூறவில்லை. என் மனைவியின் அரசியல் வளர்ச்சியை பிடிக்காத மர்ம நபர், போலியாக ஆடியோ தயாரித்து வெளியிட்டு உள்ளார். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

இதன் மீது, நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

– நமது நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.