தங்கலான்: படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து; நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில்,  ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

நடிகர் பசுபதி, நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடத்துள்ளனர். 

தங்கலான்

கே.ஜி.எஃப் எவ்வாறு உருவானது என்பதை மையமாக வைத்து இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை  எட்டியுள்ள நிலையில் அதன் ஷூட்டிங் சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று நடைபெற்றது.  இதில் விக்ரம், மாளவிகா மோகனன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த நிலையில் படப்பிடிப்பு ஒத்திகையின் போது நடிகர் விக்ரம் நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விக்ரம் அலுவகத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “ ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கும், பாராட்டிற்கும் நன்றி. தங்கலான் படத்தின் ஒத்திகையின் போது விக்ரமிற்கு காயம் ஏற்பட்டு விலா எலும்பு உடைந்திருக்கிறது. 

இதனால் அவர் தங்கலான் படப்பிடிப்பில்  சிறுது காலம் பங்கேற்க முடியாது. உங்கள் அன்பிற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு விரைவில் நலம் பெற்று வருவார்” என்று அந்தப்  பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.