அடுத்த கட்ட ஐஎம்எப் பேச்சுவார்த்தையில் அரசு ஊழியர்களுக்கு முதல் சலுகை…

எதிர்வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையில் நிவாரணம் கிடைக்குமாயின் முதலில் அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென அரசாங்கம் கொள்கையாக தெரிவித்துள்ளது என்ற அமைச்சரவை பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கம் என்ற ரீதியில் நாம் ஒரு துறையைப் பற்றி மாத்திரம் சிந்திப்பதில்லை. எனவும், இந்த நேரத்தில் அனைத்து அரச ஊழியர்கள் மீதும் பாரிய வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளதை ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.