பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின் மறைவுக்கான காரணம் குறித்து அவரது மகன் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட மனோபாலா மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
ரஜினி நடித்த ஊர்க்காவலன், ஆகாய கங்கை உள்ளிட்ட 20 படங்களை இயக்கியுள்ளார். நடிகராக சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மனோபாலா உடல் நலக்குறவால் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், பாரதிராஜா, இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவரது மறைவு குறித்து அவரது மகன் ஹரிஷ் பேசியுள்ளார். அதில், “ என் அப்பா நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார். இரண்டு வாரமாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றார் .
பிசியோ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் இன்று உயிரிழந்துவிட்டார். நாளை காலை 10 மணிக்கு வளசரவாக்கத்தில் இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
newstm.in