இந்தியா வரவிருக்கும் சீன அமைச்சர் | சூடானிலிருந்து தப்பிச் சென்ற 1,00,000 அகதிகள் – உலகச் செய்திகள்

கடந்த ஆண்டு மே மாதம் இந்திய ராப்பர் சித்து மூஸ்வாலாவின் கொலைக்குப் பொறுப்பேற்ற கேங்ஸ்டர் கோல்டி ப்ரார், கனடாவின் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். தற்போது கொலை, சட்டவிரோதத் துப்பாக்கி விநியோகம், கொலை முயற்சி ஆகிய குற்றங்களுக்காக அவர் தேடப்படுகிறார்.

உக்ரைனின் பாதுகாப்புத்துறை அமைச்சம் வெளியிட்ட காளி குறித்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவிற்காக, அந்த நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எமின் டிஜெப்பர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். உக்ரைனும், அதன் மக்களும் தனித்துவமான இந்தியக் கலாசாரத்தை மதிக்கிறார்கள் என்றும் கூறினார்.

இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அடுத்த வாரம் கனடாவுக்குப் பயணம் செய்வார் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் Early Progress Trade Agreement ( EPTA) ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா, அந்த நாட்டிலுள்ள இ-சிகரெட் சட்டங்களின் அம்சங்களைக் கடுமையாக்குவதாக அறிவித்திருக்கிறது. டீன் ஏஜ் வாப்பிங் அதிகரித்து வருவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், சுமார் 1,00,000 அகதிகள், அந்த நாட்டை விட்டு தப்பி, அண்டை நாடுகளுக்கு சென்றதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் இந்த வாரம் நடக்கவிருக்கும் எஸ்சிஓ Shanghai Cooperation Organisation’s (SCO) கூட்டத்தில் பங்கேற்க சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகிறார்.

பிரபல டேட்டிங் செயலியான டிண்டர், ஜூன் மாதத்துடன் ரஷ்யாவில் அதன் செயல்பாட்டை ரத்து செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது. உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு, அந்த நாட்டில் மனித உரிமை மீறல்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் காஸ் (James Goss) என்பவர், முகச் சதையில் அதிக அளவில் ஓட்டைகள் போட்டவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். இவரின் உதடு, மூக்கு, கன்னம் ஆகிய இடங்களில் 17 ஓட்டைகள் இருக்கின்றன.

Open AI – ChatGPT

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் அதன் மொபைல் மற்றும் அப்ளையன்ஸ் பிரிவிலுள்ள பணியாளர்கள், சாட் ஜிபிடி (Chat GPT) செயலியைப் பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறது.

கடவுளைப் பார்க்க மக்களைப் பட்டினியாக இருக்கவேண்டும் என்றும் தவறாக வழிநடத்திய கென்ய பாதிரியார் Nthenge Mackenzie, நீதிமன்றத்தில் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.