சென்னை: கோலிவுட்டின் மெகா பவர்ஃபுல் கூட்டணிகளில் ஒன்று தனுஷ் – வெற்றிமாறன்.
பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மிரட்டியுள்ளனர்.
இதில், வட சென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை விடவும் இன்னொரு வேற லெவல் பிளான் செய்துள்ளார்களாம் வெற்றிமாறனும் தனுஷும்.
தனுஷ், வெற்றிமாறனின் வேற லெவல் பிளான்:பொல்லாதவன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். முதல் படத்திலேயே தனுஷுடன் இணைந்த வெற்றிமாறன், அவரது ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவரானார். இதனையடுத்து தொடர்ச்சியாக ஆடுகளம், வட சென்னை, அசுரன் திரைப்படங்கள் மூலம் இக்கூட்டணி மாஸ் காட்டியது.
இந்நிலையில், அசுரனுக்குப் பிறகு விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை படத்தை இயக்கினார் வெற்றிமாறன். இந்தப் படத்தின் முதல் பாகம் மார்ச் இறுதியில் வெளியான நிலையில், விரைவில் விடுதலை இரண்டாம் பாகமும் ரிலீஸாகவுள்ளது. இதனையடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
இதனால், வாடிவாசலுக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, முதலில் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் தான் உருவாகும் என ரசிகர்கள் உறுதியாக நம்பியுள்ளனர். ஆனால், தற்போது வட சென்னை 2ம் பாகத்திற்கு வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் வட சென்னை 2ம் பாகத்தை விடவும் வேற லெவல் ப்ராஜக்ட் ஒன்றை கையில் எடுத்துள்ளார்களாம்.
அதன்படி, சமீபத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில், தனுஷ் – வெற்றிமாறன் இணையும் மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாம். முக்கியமாக இது கேஜிஎஃப் படம் போல ஆக்ஷன் ஜானரில் செம்ம மாஸ்ஸாக உருவாகும் என சொல்லப்படுகிறது. இதற்காக தரமான கதையை ரெடி செய்து வருகிறாராம் வெற்றிமாறன். கோலார் தங்கச் சுரங்கத்தின் பின்னணியில் ஆக்ஷன் படமாக வெளியானது கேஜிஎஃப்.
இரண்டு பாகங்களாக உருவான கேஜிஎஃப், பாக்ஸ் ஆபிஸில் மொத்தமாக 2000 கோடிக்கும் மேல் வசூலித்தது. தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படமும் கோலார் தங்கச் சுரங்கத்தின் பின்னணியில் தான் உருவாகிறது. அதனால் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியும் இதே ஜானரில் களமிறங்க முடிவு செய்துள்ளார்களாம். ஆனாலும், இதுகுறித்து இதுவரை எவ்வித அபிஸியல் அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.