பொய் பேசினால் கண்டுபிடிக்கும் கருவி!!

பொய் பேசினால் அதனை கண்டுபிடிக்கும் கருவி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு சூழ்நிலையில் பொய் சொல்வது வழக்கம். ஆனால் இனி அப்படி பொய் சொல்லி ஏமாற்ற முடியாது. அப்படி பொய் சொன்னால் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் வந்துள்ளது.

சாட்ஜிபிடி வருகைக்கு பின்னால் தொழில்நுட்பத்தால் எல்லாம் சாத்தியம் என்ற நிலை உருவாகிவிட்டது. 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவு பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பல AI கருவிகள் இப்போது உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகம் செல்வோர் உடம்பு சரியில்லை அல்லது பாட்டி இறந்து விட்டார்கள் என பொய் கூறி விடுமுறை எடுப்பார்கள்.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய AI கருவி மூலமாக ஒருவர் பொய் சொல்வதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். நாம் பேசுவதை வைத்தே நமக்கு சளி இருக்கிறதா இல்லையா, உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதெல்லாம் இந்த செயற்கை நுண்ணறிவு சாதனம் கண்டுபிடித்துவிடும்.

ரெனிஷ் யுனிவர்சிட்டி ஆஃப் அப்ளைடு சயின்ஸ் ஜெர்மனி மற்றும் சூரத்தில் இருக்கும் சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ஆய்வாளர்கள் இணைந்து இந்த AI கருவியை உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து 630 நபர்களின் குரலை ஆய்வு செய்த போது, அதில் 111 நபர்களுக்கு நிஜமாகவே சளி இருந்துள்ளது. அவர்கள் பேசும் தொனியை வைத்தே அவர்களுக்கு சளி இருக்கிறதா இல்லையா என்பதை AI கருவி மிகத்துல்லியமாக கண்டுபிடித்துள்ளது.

சோதனையில் கலந்து கொண்டவர்களிடம் மேலும் சில கேள்விகளை கேட்டு அவர்களின் குரலில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை வைத்தே சொல்வது பொய்யா மெய்யா என்பதை கண்டறிந்துள்ளது.

கிட்டத்தட்ட 70 சதவீதம் துல்லியத்தன்மையுடன் இந்த கருவி செயல்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதன் சதவீதத்தை மேலும் அதிகரிக்க சில மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.