நடிகர் சரத்பாபு நலமுடன் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
80களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர் சரத்பாபு தற்போது வரை குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து மேலும் புகழ் பெற்றார்.
இவர் முள்ளும் மலரும், அண்ணாமலை, வேலைக்காரன், முத்து என ரஜினியுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இதனால் ரசிகர்களால் சரத்பாபு நன்கு அறியப்பட்டார். 1974இல் பட்டின பிரவேசம் படம் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் சரத்பாபு குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 71 வயதாகும் இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் சரத்பாபு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக, நடிகை குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டார்.
இதையடுத்து அவர் இறந்துவிட்டதாக செய்தி காட்டுத்தீ போல் பரவியது. இந்நிலையில், அவரது குடும்பத்தினர், நடிகர் சரத்பாபு உடல்நலம் தேறி வருவதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
newstm.in