சென்னை: பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகமான நடிகை த்ரிஷா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2, லியோ என அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து 40 வயதிலும் மாஸ் காட்டி வருகிறார் நடிகை த்ரிஷா.
அதே அழகு பொங்க ரசிகர்களை கட்டிப் போட்டு வரும் குந்தவை த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து இங்கே பார்ப்போம்..
த்ரிஷாவுக்கு 40 வயசாகிடுச்சு: இயக்குநர் அமீர் இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. 1983ம் ஆண்டு சென்னையில் கிருஷ்ணன் மற்றும் உமா தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர் த்ரிஷா.
நடிகை த்ரிஷாவின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனக்கு 20 உனக்கு 18 படத்தில் எப்படி க்யூட்டாக இருந்தாரோ அதே போல 40 வயதிலும் செம அழகாக குந்தவையாக அசத்தி உள்ளார் த்ரிஷா என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
லியோ படத்தில் சம்பளம்: பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடிக்க 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிய நடிகை த்ரிஷா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாதம் 60 லட்சம் ரூபாயும் ஆண்டுக்கு 9 கோடி ரூபாய் வரை நடிகை த்ரிஷா விளம்பரங்கள், சினிமா படங்கள் மூலம் சம்பாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் சொகுசு வீடு: நடிகை த்ரிஷாவுக்கு பிறந்து வளர்ந்த சென்னையில் 6 கோடி மதிப்பிலான சொந்த வீடு ஒன்று உள்ளது. அம்மா மற்றும் பாட்டி உடன் அந்த வீட்டில் தான் நடிகை த்ரிஷா வசித்து வருகிறார். ஆந்திராவிலும் த்ரிஷாவுக்கு ஒரு வீடு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பல ரியல் எஸ்டேட் சொத்துக்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார்.
கார்கள்: கோடிக் கணக்கில் கார்கள் மீது நடிகை த்ரிஷா முதலீடு செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கவில்லை. 60 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எவோக், 63 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் இ கிளாஸ் மற்றும் 40 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ கார்களை த்ரிஷா வைத்துள்ளாராம்.
சொத்து மதிப்பு: சமந்தா, நயன்தாரா அளவுக்கு எல்லாம் நடிகை த்ரிஷா சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றும் அதிக பட்சமாக 70 முதல் 80 கோடி ரூபாய் சொத்து த்ரிஷாவின் பெயரில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொன்னியின் செல்வன் 2, லியோ என பெரிய படங்களில் நடித்து வரும் த்ரிஷா சீக்கிரமே 100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கு அதிபதியாக வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த சொத்துக்களை விட சாமி மாமி, விடிவி ஜெஸ்ஸி, 96 ஜானு, பொன்னியின் செல்வன் குந்தவை லியோ தலைவி என ரசிகர்கள் கொண்டாடும் சொத்து தான் எல்லாவற்றையும் விட நடிகை த்ரிஷா பெரிய சொத்தாக மதிக்கிறார். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!