திருவனந்தபுரம்,:வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்தது பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம் -காசர்கோடு இடையே வந்தே பாரத் ரயில் ஏப். 25 முதல் இயக்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த ரயிலில் கல்வீசப்பட்டது. நேற்று முன்தினம் இ1 பெட்டியில் பயணிகளுக்கு பரோட்டா வழங்கப்பட்டது. அதில் ஒரு பயணிக்கு கிடைத்த பரோட்டாவில் புழு இருந்தது. அதை அவர் உடன் பயணித்தோரிடம் காட்டிக் கொண்டிருந்த போது சிலர் அதை படம் எடுத்து வெளியிட்டதால் வேகமாக பரவியது. காசர்கோடு ரயில் நிலையத்தில் அந்த பயணி பரோட்டாவுடன் புகார் செய்தார். இப்புகார் பாலக்காடு டிவிஷனுக்கு மாற்றப்பட்டு ரயில்வே போலீசார், அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement