மும்பை: கடந்த சில தினங்களாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா குறித்த செய்திகள் டிவிட்டரில் வைரலாகி வந்தன.
சிங் சாப் தி கிரேட் என்ற இந்தி திரைப்படத்தில் அறிமுகமான ஊர்வசி ரவுடேலா, தமிழில் தி லெஜண்ட் படத்தில் நடித்திருந்தார்.
இவரைப் பற்றி நெட்டிசன் உமைர் சந்து தவறான தகவல்களை பதிவிட்டிருந்தால், அவர் மீது வழக்குத் தொடரப் போவதாக அறிவித்தார் ஊர்வசி ரவுடேலா.
இதுபற்றி ஊர்வசி ரவுடேலா டிவிட் செய்திருந்த நிலையில், அவருக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார் உமைர் சந்து.
ஊர்வசி ரவுடேலாவுக்கு பகிரங்க மிரட்டல்:பாலிவுட் திரையுலகில் தனது கிளாமரால் கொடிக்கட்டி பறந்து வருகிறார் நடிகை ஊர்வசி ரவுடேலா. சிங் சாப் தி கிரேட் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ஊர்வசி, தொடர்ந்து பாக் ஜானி, சனம் ரே, காபில், ஹேட் ஸ்டோரி 4, வெர்ஜின் பானுப்ரியா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவரது கவர்சிக்காகவே பாலிட்டில் மிகப் பெரிய ரசிகர்கள் உள்ளனர்.
தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். மேலும் தெலுங்கில் ரிலீஸான ‘வால்டர் வீரய்யா’ படத்தில் சிரஞ்சீவியுடனும் நடித்திருந்தார். அதேபோல், அகில் அகினேனி, மம்முட்டியுடன் இணைந்து ஏஜெண்ட் படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஊர்வசி ரவுடேலாவை அகில் அகினேனி பாலியல் தொல்லை செய்ததாக உமைர் சந்து என்பவர் டிவிட் செய்திருந்தார்.
பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் குறித்து அடிக்கடி அவதூறான தகவல்களை பரப்பி வருவதே உமைர் சந்துவின் புல் டைம் வேலை. அதேபோல், ஊர்வசி ரவுடேலாவையும் பிளாஸ்டிக் பியூட்டி என குறிப்பிட்டு அவரையும் அகில் அகினேனி டார்ச்சர் செய்திருந்ததாக டிவிட் செய்திருந்தார். இதனால் கடுப்பான ஊர்வசி ரவுடேலா, உமைர் சந்துவின் டிவிட்டர் போஸ்ட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்திருந்தார்.
மேலும், உங்களது பொய்யான ட்விட் குறித்து எனது வழக்கறிஞர் குழுவால் அவதூறு வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் தகவல் உண்மையானது அல்ல. நீங்கள் ஒரு முதிர்ச்சி அடையாத நபர், உங்களால் நானும் எனது குடும்பமும் மிக வேதனைக்கு உள்ளானதாக பதிவிட்டிருந்தார். இதனால் விரைவில் உமைர் சந்து மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மீண்டும் ஊர்வசி ரவுடேலாவை தனது டிவிட்டர் பக்கத்தில் ட்ரோல் செய்துள்ளார் உமைர் சந்து. அதில், தன்னைப் பற்றியும் தன் மீது வழக்கு தொடருவேன் என்றும் டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் ஊர்வசி ரவுடேலா. ஆனால், அதனை தற்போது டெலிட் செய்துவிட்டார். இதுதான் என்னுடைய பவர், என்னிடம் மோதினால் இப்படி தான் நடக்கும் என பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.
உமைர் சந்து சொன்னதைப் போலவே, ஊர்வசி ரவுடேலாவின் டிவிட்டர், இன்ஸ்டா பதிவுகள் டெலிட் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஊர்வசி ரவுடேலா உமைர் சந்துவால் மறைமுகமாக மிரட்டப்பட்டாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து ஊர்வசி ரவுடேலா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஊர்வசி ரவுடேலா தற்போது ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.