ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
மதயானை கூட்டம் படம் புகழ் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடித்திருக்கும் ராவணக்கோட்டம் படம் மே மாதம் 12ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.
வைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா!
அந்த படத்தை துபாயை சேர்ந்த தொழில் அதிபர் கண்ணன் ரவி தயாரித்திருக்கிறார். அந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சாந்தனு கூறியதாவது,
சக்கரக்கட்டிக்கு பிறகு மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் படமாக ராவணக்கோட்டம் இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தில் நடித்திருப்பதுடன், தயாரிப்பு பணிகளையும் நான் பார்க்க வேண்டியதாகிவிட்டது.
தயாரிப்பு என்பது மிகவும் கடினமான விஷயம். மிகவும் கஷ்டப்பட்டேன். இந்த நான்கு ஆண்டுகளில் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். படம் பார்த்த பிறகு மிகவும் திருப்தி அடைந்தேன்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கிராமத்து பையனாக நடித்திருக்கிறேன். அது எளிது அல்ல. காலில் ரத்தம் வர நடித்திருக்கிறேன். இது போன்று நான் வேறு எந்த படத்திலும் நடித்தது இல்லை. நான் மட்டும் அல்ல மற்றவர்களும் கஷ்டப்பட்டு நடித்தார்கள்.
தென்மாவட்டத்தில் உள்ள அரசியலை பற்றி படத்தில் காண்பித்திருக்கிறோம். எங்களின் படப்பிடிப்பு நடந்த இடத்தில் இரு சமூக மக்கள் வணங்கும் மரத்தை வெட்டிவிட்டார்கள். அதனால் ஊர் மக்கள் எங்களிடம் சண்டைக்கு வந்தார்கள்.
படப்பிடிப்பு நடந்தபோது பல பிரச்சனைகளை சந்தித்தோம். சொல்ல முடியாத தடைகள் எல்லாம் வந்தது. ஒரு கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் ஓரமாக சென்று கதறி அழுதுவிட்டு வந்திருக்கிறேன். தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைத்தேன்.
இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு படத்தை எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொருவரும் உயிரை கொடுத்து வேலை செய்கிறோம்.
முள் காட்டில் நடக்க வைத்து கபடி ஆடச் சொன்னார் இயக்குநர். எப்படி சார் முடியும், காலில் ரத்தம் வருகிறது என்றேன். அது எல்லாம் சரியாகிவிடும் நடி என்று கூறினார். பல்வேறு கஷ்டத்தை தாண்டி உருவாகியிருக்கும் ராவணக்கோட்டம் படம் ரிலீஸாவதில் சந்தோஷமாக இருக்கிறது.
ராவணக்கோட்டம் படத்தின் 30 ஷூட்டிங்கிற்காக நாங்கள் ஒதுக்கி வைத்த படம் 17 நாட்களிலேயே தீர்ந்துவிட்டது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி என்னை நம்பி தயாரிப்பு மேற்பார்வை பொறுப்பை கொடுத்தார். அதனால் நாளுக்கு நாள் மன அழுத்தம் அதிகாமானது.
ஷூட்டிங்ஸ்பாட்டில் பல விதமாக ஏமாற்றியும், மிரட்டியும் பணம் பறித்தார்கள் என்றார்.
குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டுக்கு வந்தவர் சாந்தனு. ஹீரோவான பிறகு தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் பிரேக் இதுவரை கிடைக்கவில்லை. ராவணக்கோட்டம் படம் சாந்தனுவுக்கு பிரேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராவணக்கோட்டம் படம் வெற்றி பெற வேண்டும் என தளபதி விஜய் ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். விஜய்ணா விஜய்ணா என தளபதியை கொண்டாடுபவர் சாந்தனு. அதனால் அவர் கெரியர் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் விஜய் ரசிகர்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது.
Vijay: வருத்தப்பட்டது உண்மை தான்: விஜய்யின் மாஸ்டர் பட ‘பேட்டி’ குறித்து சாந்தனு விளக்கம்
தனக்கு பிடித்த விஜய்ணாவுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்தார் சாந்தனு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் நடித்த காட்சிகள் பல நீக்கப்பட்டதால் வருத்தப்பட்டதாக கூறினார்.