வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: அமெரிக்காவில் சுரங்க ரயிலில் 24 வயது இளைஞரை சக பயணிகள் மூன்று பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நடந்தது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ப்ராட்வே லோபாயட் சுரங்க ரயில் நிலையத்தில், 24 வயது இளைஞர் கூச்சலிட்டு கொண்டே, பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள் மூன்று பேர் அந்த இளைஞரை பின்புறமாக தலையை அமுக்கி, கழுத்தை இறுக்கியும், கை, கால்களை அமுக்கி பிடித்தனர். சிறிது நேரத்தில் அந்த இளைஞர் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. 15 நிமிட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இதனை வீடியோவாக ஜூவான் ஆல்பர்டோ வாஸ்க்யூஸ் என்ற செய்தியாளர் எடுத்து முகநூலில் வெளியிட்டார்.
கொலையானவர் நபர் யார் , அவர் பெயர் குறித்த தகவல் வெளியிடவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement