Manobala Death – குடி குடியை கெடுக்கும்.. மனோபாலா மரணம் – பற்ற வைத்த பயில்வான் ரங்கநாதன்

சென்னை: Manobala Death (மனோபாலா மரணம்)எப்போதும் ஏதோ ஒன்றை சொல்லி பரபரப்பை பற்ற வைக்கும் பயில்வான் ரங்கநாதன் தற்போது மனோபாலாவின் மரணம் குறித்து பேசியிருக்கிறார்.

பத்திரிகையாளராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். பத்திரிகையாளராக மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபகாலமாக திரைப்படங்களில் தலை காட்டாத அவர் திரை பிரபலங்கள் குறித்து யூட்யூப் சேனல்களில் பேசிவருகிறார்.

சர்ச்சைகளை கிளப்பும் பயில்வான்: திரை பிரபலங்கள் குறித்து பேசும் பயில்வான் ரங்கநாதன் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது பல முறை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அவருக்கு எதிராக கடும் கண்டனங்களும் எழுந்துவருகின்றன. இருப்பினும் தான் சொல்வது அனைத்தும் உண்மை என்றே அவர் கூறிவருகிறார். ஆனால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவரது அந்தரங்கத்தில் தலையிடுவதை பயில்வான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றே பலரும் கூறிவருகின்றனர்.

மனோபாலா மரணம்: இதற்கிடையே நடிகரும், இயக்குநருமான மனோபாலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை அப்போலோவில் அவருக்கு முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், பிறகு வீட்டில் இருந்தபடியே அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலன் சூழலில் மனோபாலா நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று காலை 10 மணிக்கு நடக்கவிருக்கிறது.

பிரபலங்கள் இரங்கல்: மனோபாலாவின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் தள்ளியிருக்கிறது. சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். நடிகர் விஜய் நேற்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ரஜினிகாந்த் தெரிவித்த இரங்கலில், ‘அருமை நண்பர் மனோபாலா உயிரிழந்தது வேதனை தருகிறது’ என குறிப்பிட்டிருந்தார்.

என்ன நடந்தது?: இந்தச் சூழலில் மனோபாலவின் மகன் ஹரிஷ், ‘அப்பாவிற்கு கடந்த சில நாட்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. செஸ்ட் பிரச்னை இருந்தது. இப்போது தான் நன்கு உடல்நிலை தேறி வந்து கொண்டுஇருந்தார். கடந்த வாரம் அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவருக்கு பிசியோ கொடுத்துக்கொண்டுதான் இருந்தோம். திடீரென இப்படி ஆகிவிட்டது’ என கலங்கியபடி பேசியிருந்தார்.

Bayilvan Ranganathan opens up about manobala Death

பற்றவைத்த பயில்வான்: இந்நிலையில் எப்போதும் சர்ச்சையை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன் மனோபாலாவின் மரணம் குறித்து பேசியிருக்கிரார். அவர் பேசுகையில், “மோகன், விஜயகாந்த், ரஜினி என அனைவரை வைத்தும் படம் இயக்கியவர் மனோபாலா. அவர் படங்களிலும் நான் நடித்துள்ளேன். அன்பாக பேசுவார். எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வருவார்.

குடி குடியை கெடுக்கும்: படம் இயக்குவதை நிறுத்திய பின் சினிமாவில் நடிக்க பல இயக்கநர்களிடம் இவரே தொடர்புகொண்டு வாய்ப்பு கேட்டபார். எனக்கு தெரிந்து கடந்த 30 வருடங்களாக அவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. அதுதான் அவரின் மரணத்திற்கு காரணம். கல்லீரல் கெட்டு அவர் மரணமடைந்துள்ளார். மதுவை பற்றி எவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும், குடி குடியை கெடுக்கும் என சொல்வதை கேட்பதே இல்லை” என தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.