புதுடில்லி:நாட்டின், சேவைகள் துறையின் வளர்ச்சி, கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில், வளர்ச்சி கண்டுஉள்ளது.
‘எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஹோட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம், கடந்த ஏப்ரல் மாதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.
வளர்ச்சி
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
நாட்டின் சேவைகள் துறையின் வளர்ச்சி, கடந்த ஏப்ரல் மாதத்தில், 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 62.0 புள்ளிகளாக உயர்ந்து உள்ளது. இது முந்தைய மாதமான மார்ச்சில் 57.8 புள்ளிகளாக இருந்தது.
இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.
கடந்த 21 மாதங்களாக, வளர்ச்சி 50 புள்ளிகளுக்கும் மேலாகவே இருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
விலை அதிகரிப்பு அழுத்தங்கள் இருந்தபோதிலும் கூட, தேவை அதிகரித்துள்ளதை அடுத்து, சேவை துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2010 ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, புதிய வணிக வளர்ச்சி மற்றும் சாதகமான சந்தை நிலைமைகளால், உற்பத்தி வேகமாக விரிவடைந்து வருவதையே, இந்த ஏப்ரல் மாத நிலவரம் குறிப்பதாக உள்ளது என, எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூட்டு வளர்ச்சி
உற்பத்தி மற்றும் சேவை துறை இரண்டும் சேர்ந்த, கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, மார்ச் மாதத்தில் 58.4 புள்ளிகளாக இருந்த நிலையில், ஏப்ரலில் 61.6 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
இது கடந்த 2010 ஜூலைக்கு பிறகான அதிக வளர்ச்சியாகும்.
இந்தியாவின் சேவைகள் துறை ஏப்ரலில் குறிப்பிடத்தக்க செயல்திறனை பதிவு செய்துஉள்ளது. குறிப்பாக நிதி மற்றும் இன்சூரன்ஸ் துறைகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.
– பாலியானா டி லிமா, பொருளாதார இணை இயக்குனர்,எஸ் அண்டு பி., குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ்
கூட்டு வளர்ச்சி
உற்பத்தி மற்றும் சேவை துறை இரண்டும் சேர்ந்த, கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, மார்ச் மாதத்தில் 58.4 புள்ளிகளாக இருந்த நிலையில், ஏப்ரலில் 61.6 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2010 ஜூலைக்கு பிறகான அதிக வளர்ச்சியாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்