ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ளத்துக்கு இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
வடக்கு மற்றும் மேற்கு மாகணங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு காணப்படுவதால் சாலை போக்கு வரத்து தடை பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களிலும் தொய்வின்றி மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போன்று அருகில் உள்ள உகாண்டாவிலும் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு 6 பேர் பலியாகி உள்ளனர்.