2023 ஆம் ஆண்டினுள் காணி உரிமைகளை வழங்கும் 2000 காணி காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கத் திட்டம்

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கடன், நிதியுதவி மற்றும் அரச அளிப்பு காணி உரிமங்களை வழங்கும் நிகழ்வு பொலன்னறுவையில் ஆரம்பம்.

ஜனாதிபதி ரணிலின் வேலைத் திட்டத்தினை முன்னெடுக்கும் நோக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீண்டும் அவதானத்திற்குக் கொண்டு வரும் நோக்கில் பொலன்னறுவை, ஹிங்குராக்கொடை தாரகை மண்டப கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அரச அளிப்பு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் அண்மையில் (29) கலந்து கொண்ட போதே அமைச்சர் ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கிங்குராக்கொடை பிரதேச செயலகத்தினால் பயனாளிகள் 197 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் 43பேருக்கு காணி ஒதுக்கீட்டுப் பத்திரங்களும் வழங்கப்பட்டன.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பொலன்னறுவை சி. ஐ. சி. வீடமைப்பு தீர்மானத்தின் பயனாளிகள் 86 பேருக்கு அரச அளிப்பு காணி உறுதிகள் மற்றும் பயனாளிகள் 12 பேருக்கு “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு நாளைக்கு வீடு” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2.3 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கான நிதியுதவியும் வழங்கப்பட்டன.

மாவட்ட மட்டத்தில் காணி உறுதி மற்றும் வீட்டுக்கான நிதியுதவி வழங்கல் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டதற்கிணங்க இதன் முதலாவது நிகழ்வு பொலன்னறுவையில் இடம்பெற்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தற்போது தோட்ட வீடமைப்பு, கிராம மற்றும் நகரத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இலக்காக வைத்து பல்வேறு வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ‘உங்களுக்கு வீடு – நாட்டிற்கு நாளைக்கு’மற்றும் ‘மிஹிந்து இல்லம்’ வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டம் ஆகியன பிரதானமானவையாகும்.

அத்துடன் கடந்த மற்றம் இவ்வருடத்தில் மாத்திரம் நாடு பூராகவும் 1890 வீட்டு பயனாளிகளுக்காக இலவச காணி உறுதிகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ‘நாட்டில் எந்தப் பிரஜையினதும் கனவுதான் தனக்கென்று காணியொன்றையும், வீடொன்றையும் உரிமையாக்கிக் கொள்வது. தேசிய வீடமைப்பு அதிகார சபை பல்வேறு காலப்பகுதிகளில் இதற்காக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. கொரோனா தொற்று மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றினால் நாம் கடந்த காலங்களில் வீட்டு நிதி உதவி, கடன் திட்டம் போன்றவற்றை இடைநிறுத்தியிருந்தோம். எனினும் அதிகாரசபை மீள அத்திட்டங்களை ஆரம்பிக்கவும் உத்தேசித்து வருகின்றது. அதற்கிணங்கவே இவ்வுறுதிப் பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது’.

அத்துடன் இவ்வருட இறுதிக்குள் அடையாளப்படுத்தப்பட்ட அரச அளிப்பு காணி உறுதிகள் 2000 வரை வழங்க உத்தேசித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளேன். அதற்கிணங்க எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதிக்குள் தற்போது வழங்க முடியாதுள்ள உரிமைப்பத்திரங்களை வழங்கல் பூர்த்தியடையவுள்ளது. இவ்வதிகாரசபை நடைமுறைப்படுத்திய வீட்டுக் கடன் மற்றும் நிதியுதவி நிகழ்ச்சித் திட்டம் பயனாளிகளுக்காக அவர்களின் அடுத்த கடன் தவணை கொடுப்பனவு மாவட்ட மட்டத்தில் இடம்பெறும். எமது எதிர்பார்ப்பு தற்போது இத்திட்டத்தை விரைவாக நிறைவடையச் செய்வதாகும்.

இந்நிகழ்வில் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத், பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்கிரம, தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி, உப தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, பொலன்னறுவை மேலதிக செயலாளர் ஆர். எம். கே. ஆர். பி. ரத்நாயக, ஹிங்குராகொடை பிரதேச செயலாளர ஹர்ஷ பண்டார, மாவட்ட முகாமையாளர் சமிந்த தென்னகோன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.