Lokesh Kangaraj-இதை எல்லாம் எப்போவோ பண்ணியாச்சு-லோகேஷை பார்த்து பிரமிப்புலாம் இல்லை..மூத்த இயக்குநர் ஓபன் டாக்

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) மாஸ்டர் படத்தில் வரும் ஒரு காட்சி குறித்து இயக்குநர் வெங்கடேஷ் கூறியிருப்பது ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய நான்கு படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். ஒரு இயக்குர் இரண்டு படங்கள் வெற்றி கொடுப்பதே பெரும் ஆச்சரியம் என கருதப்படும் சூழலில் லோகேஷ் கனகராஜோ நான்கு படங்களையும் ஹிட் படமாக கொடுத்திருக்கிறார். குறிப்பாக விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது.

லியோ: லோகேஷ் கனகராஜ் இப்போது விஜய்யை வைத்து லியோ ப்ளடி ஸ்வீட் என்ற படத்தை இயக்கிவருகிறார். இதில் விஜய்யுடன் சஞ்சய் தத், த்ரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன், மாத்யூ தாமஸ், ப்ரியா ஆனந்த்,கௌதம் மேனன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. நேற்று உயிரிழந்த மனோபாலாவும் லியோவில் நடித்திருக்கிறார். காஷ்மீரில் ஷூட்டிங்கை முடித்து தற்போது சென்னையில் ஷூட்டிங்கை நடத்திவருகிறது படக்குழு.

மாஸ்டரால் வந்த எதிர்பார்ப்பு: லியோ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கான காரணங்களில் ஒன்று விஜய்யும், லோகேஷும் ஏற்கனவே இணைந்திருந்த மாஸ்டர் திரைப்படம். அந்தப் படத்தில் விஜய் புதுமையாக காட்டப்பட்டிருந்தார். அதுமட்டுமிட்டுமின்றி ஜேடி என பெயர் வைத்துவிட்டு முழு பெயரையும் சொல்லாமல் இருந்தது, தனியாகவே இருக்கும் ஹீரோவுக்கு ப்ளாஷ்பேக் இல்லாதது புதுமைகளை புகுத்தியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.

மாஸ் காட்சிய் இன்ட்ரோ காட்சி: விஜய் படம் என்றாலே அவரது இன்ட்ரோ காட்சிக்காக ரசிகர்கள் தவம் இருப்பார்கள். அதனாலேயே அந்தக் காட்சியில் இயக்குநர்களின் கவனம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் மாஸ்டர் படத்தில் அந்தக் காட்சியும் மிகவும் வித்தியாசமாகவும், எளிமையாகவும் ஆரம்பிக்கும். ஆனால் காட்சிக நகர நகர அட்டகாசமான மாஸ் சீனாக மாற்றமடைந்திருக்கும். குறிப்பாக ஓடும் பேருந்தில் விஜய் ஏறும் இடம் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது.

இதை எப்போவோ செஞ்சாச்சு: இந்நிலையில் இதேபோன்ற காட்சியை ஏற்கனவே நிலாவே வா படத்தில் வைத்துவிட்டதாக அந்தப் படத்தின் இயக்குநர் வெங்கடேஷ் கூறியிருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், “மாஸ்டரில் விஜய் ஓடும் பேருந்தில் ஏறும் காட்சியை நான் ஏற்கனவே நிலாவே வா என்ற படத்தில் வைத்துவிட்டேன். அதனால் மாஸ்டர் படத்தில் அதனைப் பார்க்கும்போது எனக்கு அப்படி ஒன்றும் பிரமிப்பாக தெரியவில்லை.

ஜன்னலின் வழியே உள்ளே போவார்: அதுவும் மாஸ்டர் படத்தில் விஜய் ஓடும் பேருந்தில் ஏற மட்டும்தான் செய்வார். ஆனால் நிலாவே வா படத்தில் வைத்த காட்சியில் விஜய் ஓடி வந்து பேருந்தின் ஜன்னல் வழியாக ஏறி உள்ளே குதிப்பார். அப்படி செய்ய முடியுமா என்று அவரிடம் கேட்டேன். அதெல்லாம் ஒன்னும் இல்லை தாராளமாக செய்கிறேன் என்று கூறினார். அதனால்தான் அதனை சிங்கிள் ஷாட்டாக எடுத்தேன்” என குறிப்பிட்டார். தற்போது அவரது இந்தப் பேச்சு ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.