ரயில் நிலையம், சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தாக்குதலில் 21 பேர் பலி: உக்ரைனுக்கு ரஷ்யா பதிலடி| 21 killed in attack on train station, supermarket: Russia retaliates for Ukraine

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கீவ்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்வதற்காக கிரெம்லின் மாளிகை மீது உக்ரைன் ஏவிய இரண்டு, ‘ட்ரோன்’கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. உக்ரைனில் உள்ள ரயில் நிலையம், சூப்பர் மார்க்கெட் மீது ரஷ்யா இன்று (மே 04) அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

latest tamil news

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போர் துவங்கியதில் இருந்தே, ரஷ்யாவின் பல்வேறு கட்டடங்கள் மீது, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல சதித்திட்டம் தீட்டி, கிரெம்லின் மாளிகை மீது இரண்டு ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தின. ஆனால், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

latest tamil news

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீதும், கர்சன் நகர் மீதும் ரஷ்யா இன்று(மே 04) அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ரஷ்யா ஏவிய ஏவுகணைகள் ரயில்நிலையம் மற்றும் சூப்பர் மார்க்கெட்டை தாக்கின. இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 48 பேர் படுகாயமடைந்தனர்.

அதிபர் மாளிகை மீது உக்ரைன் நேற்று டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், அந்த தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.