Vairamuthu on Manobala – வைரமுத்துவை அழ வைத்த மனோபாலா – உருக்கமான ட்வீட்

சென்னை: Vairamuthu on Manobala (மனோபாலா குறித்து வைரமுத்து) ஒரு நகைச்சுவை கடைசியாய் அழ வைத்துவிட்டது என மனோபாலா இறப்புக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் மனோபாலா. அவர் இயக்கிய பிள்ளை நிலா திரைப்படம் இன்றுவரை பலரது ஃபேவரைட். அதேபோல் ரஜினிகாந்த்தை வைத்து அவர் இயக்கிய ஊர்க்காவலன் படம், விஜயகாந்த்தை வைத்து இயக்கிய சிறைப்பறவை, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் உள்ளிட்ட படங்களில் ஒரு இயக்குநராக தனது ஆளுமையை நிரூபித்திருப்பார் வைரமுத்து.

சிறந்த நடிகர்: இயக்கத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் கவனம் செலுத்திவந்த மனோபாலா 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தனது உடல்மொழியாலும்,தன்னுடைய டயலாக் டெலிவரியாலும் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர். அரண்மனை, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் அவரது நகைச்சுவை நடிப்பு பார்ப்பவர்களுக்கு வயிறு வலியை வரவைக்கும் வல்லமை கொண்டது. அதேபோல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் கலக்கியவர் மனோபாலா.

தரமான படம் கொடுத்த மனோபாலா: இயக்கம், நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் தடம் பதித்த மனோபாலா சதுரங்க வேட்டை என்ற மிகச்சிறந்த படத்தை முதல் படமாக தயாரித்தார். அதை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். அதனையடுத்து சதுரங்க வேட்டை 2, பாம்பு சட்டை படங்களை தயாரித்தார். இதில் சதுரங்க வேட்டை 2 படம் சில பிரச்னைகளால் ரிலீஸாகாமல் முடங்கி கிடக்கிறது.

உடல்நலக்குறைவு: இந்தியன் 2, லியோ உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியிருந்தார் மனோபாலா. இப்படிப்பட்ட சூழலில் கல்லீரல் பிரச்னையால் சிகிச்சை எடுத்துவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் நேற்று பிரிந்தது. அவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Vairamuthu Emotional tweet for Manobala death

வைரமுத்து ட்வீட்: இந்நிலையில் பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் மனோபாலா உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவு செய்திருக்கும் ட்வீட்டில், ஒரு நகைச்சுவை கடைசியாய் அழவைத்துவிட்டது மரணத்தின் இறுதிவரை இயங்கிக்கொண்டிருந்த மனோபாலா இன்று இல்லை திரையின் எல்லாத் துறைகளிலும் இயங்கியவன்; எல்லாரோடும் பழகியவன் இனி இல்லை ஒல்லியாய் இருப்பவர்கள் நீண்டநாள் வாழ்வார்கள் என்ற மனிதக் கணக்கை மரணம் உடைத்துவிட்டது என் ஆழ்ந்த இரங்கல்” என குறிப்பிட்டிருக்கிறார்.

தகனம் செய்யப்பட்ட உடல்: மனோபாலாவின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச்சடங்கை முடித்த பிறகு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அந்த இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். வளசரவாக்கம் பிருந்தாவன் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.