ஜனாதிபதி மாளிகை தாக்குதலுக்கு பதிலடி: உக்ரைன் நகரங்களின் மீது கொடும் தாக்குதலை நடத்திய ரஷ்யா


ரஷ்யாவின் ஜனாதிபதி மாளிகை தாக்கப்பட்டதை தொடர்ந்து, உக்ரைன் நகரின் மீது கொடும் தாக்குதலை நடத்தியுள்ளது.

ஜனாதிபதி மாளிகை தாக்குதல்

ரஷ்யாவின் ஜனாதிபதி மாளிகை மீது உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொலை முயற்சி செய்யப்பட்டது. இதற்கு ரஷ்ய தரப்பில் பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவத்தின் போது  விளாடிமிர் புடின் ஜனாதிபதி மாளிகையில் இருக்கவில்லை எனவும், அந்த ட்ரோன் தாக்குதலில் எவரும் காயம்படவும் இல்லை என ரஷ்ய தரப்பு தெரிவித்திருந்தது.

ஜனாதிபதி மாளிகை தாக்குதலுக்கு பதிலடி: உக்ரைன் நகரங்களின் மீது கொடும் தாக்குதலை நடத்திய ரஷ்யா | Russiaukraine War Explosions Kyiv Drone Attack@East2West

இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்க வேண்டும் என ரஷ்ய ஆதரவு நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன.

ஜனாதிபதி புடினின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக செயல்படும், முன்னாள் ரஷ்ய ஜனாதிபதியான திமித்ரி மெத்வெதேவ் ’ஜெலென்ஸ்கி படுகொலை செய்யப்பட வேண்டும்’ என கூறியுள்ளார்.

கிய்வ் நகரின் மீது தாக்குதல்

இதனை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைனின் கிய்வ் நகர் மற்றும் கர்சன் நகரின் ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கியுள்ளது.

ஜனாதிபதி மாளிகை தாக்குதலுக்கு பதிலடி: உக்ரைன் நகரங்களின் மீது கொடும் தாக்குதலை நடத்திய ரஷ்யா | Russiaukraine War Explosions Kyiv Drone Attack@twitter

இத்தாக்குதலில் கர்சன் நகரின் ரயில் நிலையம் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில், ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 48 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜெலென்ஸ்கி ட்விட்

கிய்வ் நகரின் பெரும்பாலான பகுதிகள் ஏவுகணை தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கேற்பட்ட உயிரிழப்புகளை பற்றி சரியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை.

இத்தாக்குதலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜெலென்ஸ்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ’ உலகம் இதனை பார்க்க வேண்டும், நாங்கள் குற்றவாளிகளை மறக்க மாட்டோம், அவர்களுக்கு தக்க பதிலடி தருவோம்’ என பதிவிட்டுள்ளார்.       



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.