நியூயார்க்: சிறையில் உள்ள ஈரானைச் சேர்ந்த மூன்று பெண் பத்திரிகையாளர்களுக்கு, ஐ.நா.,வின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பத்திரிகை சுதந்திர தினமான நேற்று, ‘யுனெஸ்கோ’ எனப்படும் ஐ.நா.,வின் கல்வியியல், அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு சிறப்பு விருதுகளை அறிவித்தது. இந்த விருதுகளுக்கு மேற்காசிய நாடான ஈரானைச் சேர்ந்த, சிறையில் உள்ள மூன்று பெண் பத்திரிகையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஈரானில், ‘ஹிஜாப்’ எனப்படும் முகம் மற்றும் தலையை மறைக்கும் துணியை பெண்கள் அணிவது கட்டாயமாகும். அதை சரியாக அணியாத, மாஷா அமினி என்ற, ௨௨ வயது இளம்பெண், போலீஸ் தாக்குதலில் உயிரிழந்தார். இது ஈரானில் பெரிய அளவில் போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிராக பெண்கள் போராடி வருகின்றனர். கடந்தாண்டு செப்.,ல் இந்த பெண் உயிரிழந்தது தொடர்பாக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் நிலோபர் ஹமேதி, ஐ.நா., விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அமினியின் இறுதிச் சடங்கு தொடர்பான செய்திகளை வெளியிட்ட, இலாஹா முகமதியும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பத்திரிகையாளரும், சமூகஆர்வலருமான நர்கஸ்முகமதிக்கும் ஐ.நா.,விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement