ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
மணிரத்னத்தின் இயக்கத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸானது.
வைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா!
படம் வெளியான வேகத்தில் ஆன்லைனில் கசிந்துவிட்டது. பொன்னியின் செல்வன் 2 படத்தை எல்லாம் செல்போனில் அல்ல தியேட்டரில் தான் பார்த்து ரசிக்க வேண்டும் என ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் 2 படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த வார இறுதிக்குள் ரூ. 250 கோடியை தாண்டிவிடும் என நம்பப்படுகிறது.
இரண்டாம் பாகத்தை பார்த்த அனைவரும் ஐஸ்வர்யா ராய் மற்றும் சீயான் விக்ரமின் நடிப்பை பற்றியே வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். குந்தவை த்ரிஷாவை அந்த அளவுக்கு பார்க்க முடியாமல் போய்விட்டது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இருப்பினும் குந்தவையை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இளம் வயது குந்தவையாக நடித்த பெண் யார் என்று ரசிகர்கள் குழம்பிவிட்டார்கள். இளம் குந்தவை யாரென்று தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன் என சமூக வலைதளங்களில் கேட்டு வந்தார்கள். இந்நிலையில் அந்த பெண் யார் என்பது தெரிந்துவிட்டது அவர்களுக்கு.
View this post on InstagramA post shared by Kanya Bharathi (@bharathikanya_offl)
டிவி சீரியல்களில் நடித்து வரும் கன்யா பாரதியின் மகள் நிலா தான் இளம் வயது குந்தவையாக நடித்தவர். கன்யா பாரதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிலாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ, கண்டுபிடித்துவிட்டோம்ல. மேடம் உங்கள் மகளுக்கு சுத்திப் போடுங்க, நன்றாக நடித்திருந்தார் என தெரிவித்துள்ளனர்.
நிலா குந்தவை கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் அம்மா கன்யா பாரதி. மேலும் நிலாவுடன் விமானத்தில் எடுத்த செல்ஃபியையும் வெளியிட்டுள்ளார்.
இரண்டு நிலாக்கள் மணிரத்னத்தின் படத்தில் நடித்திருக்கிறார்கள். ஒரு நிலா கன்யா பாரதியின் மகள். இன்னொரு நிலா சீயான் விக்ரமின் தெய்வத்திருமகள் பட மகள். ஏ.எல். விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகள் நிலாவாக நடித்திருந்தார் சாரா அர்ஜுன்.
Ponniyin Selvan 2: ஒரே ட்வீட்டில் விஜய் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த இளம் நந்தினி
அந்த சாரா அர்ஜுன் தான் பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 படங்களில் இளம் வயது நந்தினியாக நடித்தவர்.
இதற்கிடையே குந்தவை த்ரிஷா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. காலையில் இருந்தே ட்விட்டரில் அதுவும் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறார் த்ரிஷா.
Trisha: த்ரிஷா பற்றி அன்றே சரியாக கணித்த யூகி சேது
பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சிகள் துவங்கியதில் இருந்தே ட்விட்டரில் தினமும் டிரெண்டாகிறார் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீஸாகிவிட்டதால் மீண்டும் லியோ படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார் த்ரிஷா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் அவருக்கு ஜோடி த்ரிஷா தான். 14 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் சேர்ந்து மீண்டும் நடிக்கிறார்.
விஜய்க்கு ராசியான ஹீரோயின்களில் த்ரிஷாவும் ஒருவர். லியோ படத்தில் விஜய், த்ரிஷாவின் மகளாக பிக் பாஸ் 6 நிகழ்ச்சி புகழ் ஜனனி நடிக்கிறாராம்.