மாஜி பிரதமர் பெயரில் டிரைவிங் லைசென்ஸ் குடிபோதையில் சிக்கிய நபரிடமிருந்து பறிமுதல்| Driving License in the name of Former Prime Minister seized from drunk man

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில், குடிபோதையில் காரில் வந்து விபத்தை ஏற்படுத்திய நபரை, போலீசார் கைது செய்து விசாரித்ததில், அவரிடம், பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெயரில், போலி டிரைவிங் லைசென்ஸ் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து, ஐரோப்பிய நாடான நெதர்லாந்து காவல் துறைசெய்தித் தொடர்பாளர் திஜ்ஸ் டாம்ஸ்ட்ராகூறியதாவது: கடந்த30ல், கிரோனிங்கன் நகரத்தில் உள்ள எம்மா பாலம் அருகே, கார் ஒன்று விபத்துக்குஉள்ளானதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காரை மீட்டு, அங்கிருந்த கார் டிரைவரிடம் விசாரித்தனர். விசாரணையில், அவர் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. பின், காருக்குள் போலீசார் சோதனைசெய்ததில், பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெயரில், அவரது புகைப்படம் மற்றும் சரியான பிறந்த தேதியுடன், போலி டிரைவிங் லைசென்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது, 2019ல் வழங்கப்பட்டதாகவும், 3000 வரை செல்லுபடியாகும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.