டெல்லி ஜந்தர்மந்தரில், மல்யுத்த வீரர் – வீராங்கனைகள் மற்றும் போலீசாருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு மதுபோதையில் இருந்த போலீசார்கள் சிலர் தகராறில் ஈடுபட்டு தங்களை தாக்கியதாக வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தாக்குதலில் மல்யுத்த வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மல்யுத்த வீராங்கனை ஸ்வாதி மாலிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே, தாங்கள் பெற்ற பதக்கங்கள், விருதுகளை அரசிடமே திரும்ப தரவுள்ளதாக பஜ்ரங்க் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும், புகாரளித்த வீராங்கனைகளிடம் இதுவரை போலீசார் சாட்சியங்களை பதிவு செய்யவில்லை எனவும் வீரர்கள் குற்றம்சாட்டினர்.