அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள்
Custody hero Naga Chaitanya: கஸ்டடி ஹீரோ நாக சைதன்யா முத்தம் குறித்த கேள்விக்கு அளித்த பதில் ரசிகர்களை கவர்ந்துவிட்டது.
கஸ்டடிவெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்திருக்கும் கஸ்டடி படம் மே மாதம் 12ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸாகும் கஸ்டடியை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார் நாக சைதன்யா. பேட்டிகளும் கொடுக்கிறார். பேட்டிகளில் அவர் ஜாலியாக பேசுவதை பார்த்து ரசிகர்கள் வியக்கிறார்கள். சீரியஸான ஆள் என்று நினைத்தால் மனிதர் செம கூலா இருக்கிறாரே என்கிறார்கள் ரசிகர்கள்.
வைரமுத்துவைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா!
கிரஷ்பேட்டி ஒன்றில் ரகசிய கிரஷ் பற்றி நாக சைதன்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, இதில் என்ன ரகசியம் வேண்டி கிடக்கு, வெளிப்படையாகவே சொல்கிறேன். அண்மையில் பாபிலோன் என்கிற ஹாலிவுட் படம் பார்த்தேன். மார்கோ ராபி மீது தான் கிரஷ். அவரின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. அவர் மீதும், அவரின் நடிப்பு மீதும் பயங்கர கிரஷ் என்றார்.
முத்தம்எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்திருக்கிறீர்கள் என்கிற வில்லங்கமான கேள்விக்கு சூப்பராக பதில் சொன்னார் நாக சைதன்யா. அவர் கூறியதாவது, தெரியவில்லை. கணக்கு இல்லை. படங்களிலேயே பல முத்தக் காட்சிகளில் நடித்துவிட்டேன். எப்படி கணக்கு போட முடியும் என்றார்.
சோபிதாசமந்தாவை பிரிந்த பிறகு பொன்னியின் செல்வன் படம் புகழ் சோபிதா துலிபாலை நாக சைதன்யா காதலித்து வருவதாக அவ்வப்போது பேசப்படுகிறது. அதை சோபிதாவும் கண்டுகொள்ளவில்லை, நாக சைதன்யாவும் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் அந்த காதல் பேச்சு மட்டும் அடங்குவதாக இல்லை. இதற்கிடையே நாக சைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
Naga Chaitanya: வாழ்க்கையின் மிகப் பெரிய வருத்தம்: சமந்தா சொன்ன அதே பதிலை சொன்ன நாக சைதன்யா
கோலிவுட்Naga Chaitanya:சமந்தா வசிக்கும் ஏரியாவில் ரூ. 15 கோடிக்கு வீடு வாங்கி குடியேறிய மாஜி கணவர்சமந்தா முன்னணி நடிகையாக இருக்கும் கோலிவுட்டில் அறிமுகமாகிறார் நாக சைதன்யா. வெங்கட் பிரபு மூலம் கோலிவுட் வரும் நாக சைதன்யாவின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டாலும் நம்ம தமிழ்நாட்டு மாப்பிள்ளையாக இருந்தவரின் படம் வருகிறது, அதை பார்க்க வேண்டும் என்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்.
வெங்கட் பிரபுகஸ்டடி படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார் வெங்கட் பிரபு. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை சுவாரஸ்யமாக படமாக்கி வரும் அவரை அக்கட தேசத்து ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. சிம்புவை வைத்து மாநாடு எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த கையோடு கஸ்டடி படத்தை இயக்கி, வெளியிடுகிறார் வெங்கட் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.