புதுடில்லி: ‘பாஸ்டேக்’ அமைப்பின் மூலம் ஒரு நாள் சுங்க வரி வசூல், இதுவரை காணாத அளவில் 193.15 கோடி ரூபாயாக உச்சத்தை தொட்டுள்ளது. இதன் வாயிலாக ஒரே நாளில், 1.16 கோடி பரிவர்த்தனைகளும் நடந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சுங்க வரி வசூலுக்காக பிப்ரவரி 2021ம் ஆண்டு முதல், நாடு முழுவதும் பாஸ்ட்டேக் அமைப்பு கட்டாயமாக்கப்பட்டது. மேலும், இந்த திட்டத்தின் கிழ் உள்ள சுங்கச்சாவடிகள், 770ல் இருந்து 1,228 ஆக விரிவு படுத்தப்பட்டுள்ளது. தற்போது 97 சதவீதம் நெடுஞ்சாலை பயணிகள் பாஸ்டேகை பயன்படுத்துவதாகவும், கிட்டத்தட்ட 6.9 கோடி பயனாளர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு, சுங்கச்சாவடி செயல்படுகளின் செயல்திறனை மேம் படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, சாலை சொத்துக்களின் துல்லியமான மதிப்பீட்டிற்குவழிவகுத்து, இந்தியாவின் நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீட்டையும் ஈர்க்கிறது. தற்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ‘குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட்’ அமைப்பு சார்ந்த சுங்க வரி வசூல் திட்டத்தை கொண்டுவர முனைப்பு காட்டி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement