பழனி : குடும்ப வறுமையினால் திமுக நிர்வாகி தற்கொலை.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே கோட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜா முகம்மது. இவர் முன்னாள் தி.மு.க கிளை செயலாளராகவும், விவசாய தொழிலாளர் அணியின் துணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார். இவருக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், ராஜ முகம்மதுவால் பழனியில் உள்ள பள்ளிவாசலுக்கு தற்காலிக பணிக்கும் செல்ல முடியவில்லை. இதனால் முகமதுவின் குடும்பம் வறுமையில் மூழ்கியது.
இதற்கிடையே, ராஜா முகம்மதுவின் மனைவி மற்றும் மகளுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜா முகம்மது, நேற்று கோதைமங்களம் ரயில்வே தண்டவாளத்தில் சென்ற திருவனந்தபுரம் – மதுரை ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து, ராஜா முகம்மதுவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.