ரோம்: இத்தாலி நாட்டில் வெறும் 90 ரூபாய்க்கு ஒரு பெண் வாங்கிய வீடு ஒன்று இன்று 4 கோடி ரூபாயாம். 90 ரூபாய் வீடு 4 கோடி ரூபான் என்கிற அளவில் மதிப்பு எப்படி உயர்ந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
வாழ்க்கையில இரண்டு விஷயம் மிகவும் முக்கியமானது, ஒன்று கல்யாணம், இன்னொன்று வீடு, இரண்டுக்குத்தான் நம் மக்கள் அதிக பணத்தை செலவு செய்வார்கள்.
குறிப்பாக தங்களுக்கு என்று ஒரு சொந்த வீடு வேண்டும் என்பது நடுத்தர மற்றும் ஏழை மக்களின் கனவாக உள்ளது. வெறும் கனவாகவே பலரது வாழ்க்கை முடிந்துவிடுகிறது. சிலருக்கத்தான் அது நிஜத்தில் சாத்தியமாகிறது. இது ஒருபுறம் எனில், என்றாவது மதிப்பு உயரும் என்று நினைத்து இடத்தையோ, வீட்டையோ வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்
அதற்காக சென்னை போன்ற நகரங்களில் கோடிகளை கொட்டவும் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.இப்படியா ஒரு சூழல் இருக்கும் நிலையில், ஒரு பெண் ஒரு யூரோ அதாவது வெறும் 90 ரூபாய்க்கு வீடு வாங்கி அதை கோடிக்கணக்கான மதிப்புள்ள இடமாக மாற்றி இருக்கிறார்.
17ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட வீடுகள் இத்தாலி நாட்டின் சிசிலி பகுதியில் அமைந்திருக்கின்றன. இவை 2019ம் ஆண்டு ஏலத்திற்கு வந்தன. இத்தாலிய அரசு சலுகை விலையி இந்த வீடுகளை ஒரு யூரோ, ஒரு வீடு , அதாவது 90 ரூபாய்க்கு ஒரு வீடு, அவங்க ஊர் மதிப்பில் ஒரு ரூபாய்க்கு ஒரு வீடு என்கிற திட்டத்தின் கீழ் ஏலமிட்டது.
இந்த திட்டத்தை பார்த்து ஆச்சர்யப்பட்ட அமெரிக்காவில் வசிக்கும் இத்தாலிய பெண் மெரடித் தப்போனே (43 வயது) (Meredith Tabbone) என்பவர் சூப்பராக ஒரு திட்டம் போட்டார். எப்படி என்றால் இவர் பூர்வீகம் சிசிலி பகுதிதானாம். அந்த கிராமத்தில் தான் மெரடித்தின் கொள்ளு தாத்தா வாழ்ந்த ஊராக இருந்திருக்கிறது.
அங்கு தான் 750 சதுரடி அளவிலான ஒரு வீடு சொத்து ஏலத்திற்கு வந்துள்ளது. அந்த வீட்டில் மின்சாரம், தண்ணீர், ஜன்னல் கதவுகள் போன்ற எந்த வசதியும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் இதை ஒரு யூரோ அதாவது ரூ.90 மட்டுமே கொடுத்து 2019இல் ஏலம் வாங்கினார் மெரடித். அந்த வீட்டை வாங்கியதுடன் அருகே உள்ள வீட்டையும் ரூ.27 லட்சத்திற்கு வாங்கி இரண்டையும் இணைத்து 3000 சதுரடி வீடாக மாற்றி புணரமைக்க தொடங்கியுள்ளனர். இதற்காக சுமார் இரண்டு ஆண்டுகள் முயற்சி எடுத்து 1.89 கோடி ரூபாய் பணத்தையும் செலவு செய்திருக்கிறாராம்.
புதிதாக புணரமைக்கப்பட்ட அந்த வீட்டில், 4 படுக்கை அறைகள், 4 குளியல் அறைகள், சமையல் அறை, டைனிங் அறை ஆகியவற்றை அவர் உருவாக்கி இருக்கிறார். இப்போது இந்த புதிய வீட்டின் மதிப்பானது ரூ.4.10 கோடியாக உயர்ந்துள்ளளதாம். 750 சதுர அடியை வெறும் 90 ரூபாய்க்கு வாங்கி அதை புணரமைத்து வீட்டையே வேறலெவலில் மாற்றிய பெண்ணை பலரும் பாராட்டுகிறார்கள்.
இது பற்றி அந்த பெண் மெரடித் கூறுகையில், நான் வாங்கும் போது வீடு மிகவும் மோசமான நிலையில் இருந்தது . ஆனாலும் இது மிகவும் வசீகரமாக இருந்தது! இது மிகவும் சுவாரஸ்யமான கட்டிடக்கலை இருப்பதை கண்டேன். அதனால் வாங்கினேன். இந்த வீடு 750 சதுர அடி, அதில் மின்சாரம், குடி நீர் அல்லது ஜன்னல்கள் இல்லை எனவே எதுவுமே இல்லை. இதையடுத்து அதை வித்தியாசமான முறையில் ஒரு கனவு இல்லமாக மாற்றியுள்ளோம்” என்றார்.