புதுடெல்லி,
ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் துப்பாக்கிச்சுடும் பயிற்சி, கொல்கத்தாவில் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. புலந்த் பாரத் என்ற பெயரில்,கொல்கத்தாவின் கிழக்கு கமாண்ட் படையில் உள்ள உயரமான பீரங்கித் தளத்தில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மற்றும் தவாங் மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள சிறப்பு படைகள், விமானப்படை, மத்திய ஆயுதப் படை ஒருங்கிணைப்புடன், பீரங்கி மற்றும் துப்பாக்கிச்சூடு திறன் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
கொல்கத்தா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அதிரடி போர் ஒத்திகை நடைபெற்றது. இதில் இந்திய ராணுவத்தில் அதிநவீன பீரங்கிகள், ஹெலிகாப்டர் மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டு போர் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அருணாச்சலப்பிரதேசத்தில் தாவாங் மற்றும் மேற்கு காமன் பகுதியில் ஏவுகணை வீசியும் போர் ஒத்திகை நடைபெற்றது.