இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பள்ளிக்குள் புகுந்த மர்மநபர்கள் கண்மூடித்தனமாக நடத்திய கொடூர துப்பாக்கிச்சூட்டில் 5 ஆசியர்கள் உள்பட 7 பேர் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த நிலையில் இதுபற்றிய பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் திடீரென மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவதும், குண்டுகள் வீசப்படுவதும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் பாகிஸ்தானில் இன்று அப்படியொரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பாராச்சினார் என்ற மாகாணம் உள்ளது. இது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த மகாணத்தில் குர்ராம் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு பழங்குடி மக்கள் தான் அதிகம் வசிக்கின்றனர்.
இந்நிலையில் தான் குர்ராம் பகுதியில் பழங்குயினருக்கான பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று பள்ளிக்கு ஆசிரியர்கள், ஊழியர்கள் சென்றிருந்தனர். அப்போது திடீரென்ற ஒரு கும்பல் பயங்கர ஆயுதத்துடன் பள்ளிக்குள் நுழைந்தது. அந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் ஆசிரியர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாயா சுட்டுவிட்டு வெளியேறிது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் பள்ளியில் இருந்த 7 ஆசிரியர்கள் குண்டுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். இறந்தவர்கள் அனைவரும் முஸ்லிம்களில் சிறுபான்மையினராக கருதப்படும் பிரிவை சேர்ந்தவர். இவர்களுக்கும், சன்னி பிரிவை சேர்ந்த ஆப்கானிஸ்தான் சார்பு பயங்கரவாத குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருவது வழக்கமான ஒன்றாகும்.
இருப்பினம் இந்த சம்பவம் எப்படி நடந்தது? பின்னணியில் யார் என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை. உள்ளூரில் உள்ள கும்பல் இந்த தாக்குதலை நடத்தியதா? அல்லது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனாலும் தற்போது வரை எந்த பயங்கரவாத அமைப்பும் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.
இருந்தாலும் பயங்கரவாத அமைப்பின் செயல்பாட்டை விசாரணை அதிகாரிகள் புறம்தள்ளவில்லை. ஏனென்றால் சமீபகாலமாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மோதல் போக்கு உள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத குழு இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.