வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தைபே-சீனாவில் தங்கள் மதத்தை பின்பற்றும் காரணத்துக்காக, உய்கர் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என சீன அரசு அடையாளப்படுத்துவதாக, மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இதன் தலைநகரான உரும்குயி என்ற இடத்தில் வசிப்பவர்கள், தங்கள் மொபைல் போன்களில், ‘ஜிங்வாங் வெய்ஷி’ என்ற செயலியை கட்டாயம் தரவிறக்கம் செய்து கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் வாயிலாக, அந்த மொபைல் போன்களில் உள்ள தரவுகளை போலீசார் அதிகாரப்பூர்வமாக கண்காணிக்க அந்த செயலி உதவுகிறது. ஜின்ஜியாங் மாகாணத்திற்கு வருபவர்கள், ‘பெங்காய்’ என்ற செயலியை தரவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
இது போல மொபைல் போன் தரவுகளை கண்காணிக்கும் போலீசார், அதில் மத சம்பந்தமான செய்திகள், ‘வீடியோ’க்கள் இருந்தால், அவர்களை தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்துவதாக, மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
சீனாவில் கடந்த 2017 – 18ல் 10 லட்சத்துக்கும் அதிகமான மொபைல் போன்களில், 1.10 கோடி தேடல்களில், பிரச்னைக்குரியதாக கண்டறியப்பட்ட 1,000 உள்ளடக்கங்களில், 57 சதவீதம் மதம் சம்பந்தப்பட்டது என கண்டறியப்பட்டது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement