நெதர்லாந்தில் சமாதானத்தை நெருங்கி, நீதியை மீட்டெடுக்க நாங்கள் வேலை செய்கிறோம் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து பயணம்
ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எதிர்பாராத விதமாக நெதர்லாந்திற்கு சென்றார்.
அங்கு பேசிய அவர், உக்ரைன் தனது சொந்த மண்ணில் சண்டையிடுவதில் கவனம் செலுத்துகிறது என்று கூறினார்.
Image: Reuters
ஜெலென்ஸ்கியின் பதிவு
மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று இங்கே, நெதர்லாந்தில் சமாதானத்தை நெருங்கி நீதியை மீட்டெடுக்க நாங்கள் வேலை செய்கிறோம்.
போரில் வெற்றி என்பது ஆயுத பலத்தால் வெல்வது – இப்படித்தான் அந்த வேலை நடக்கும். மேலும், உக்ரைனுக்கு ஆயுதத்தின் ஒவ்வொரு பகுதியையும் வழங்கிய நெதர்லாந்துக்கும் மற்றும் வாழ்க்கையை பாதுகாக்க எங்களுக்கு உதவும் வலுவான தலைமைக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
ஆனால், வெற்றிக்குப் பின் நிரந்தரமான அமைதி என்பது மதிப்புகளின் வலிமையினால் மட்டுமே அடையப்படுகிறது.
முதலாவதாக, இது சுதந்திரம் மற்றும் சட்டத்தின் வலிமையாகும், இது நீதியை உறுதிப்படுத்த முழுமையாக செயல்பட வேண்டும். ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் பெரும்பலான குற்றங்களுக்கு உக்ரேனிய நீதிமன்றங்கள் பொறுப்பை உறுதி செய்யும்’ என தெரிவித்துள்ளார்.
Image: Heikki Saukkomaa/Lehtikuva, via Associated Press
சர்வதேச தீர்ப்பாயம்
அத்துடன் அவர், சிறப்பு சர்வதேச தீர்ப்பாயம் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஆக்கிரமிப்புக்கு தவிர்க்க முடியாத தண்டனை என்ற பாரம்பரியம் இருக்கும்போது, ஆக்கிரமிப்பு மீண்டும் மீண்டும் செய்யப்படாத உத்தரவாதத்தின் பாரம்பரியம் இருக்கும். நாங்கள் அதை உண்மையாக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நெதர்லாந்தில் மார்க் ருட்டேவை உக்ரைன் ஜனாதிபதி சந்திப்பார் என்றும், ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
Image: Remko de Waal / ANP / AFP