‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. இப்படத்திற்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டு திரைப்படம் வெளியீட்டுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் அந்த படத்தில் தமிழ் பதிப்பை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் தயக்கம் காட்டினர். இதன் காரணமாக தி கேரளா ஸ்டோரி படத்தின் தமிழ் பதிப்பு தமிழகத்தில் நாளை வெளியாகாது. இந்தி பதிப்பு மட்டும் சில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.