கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்திய சிறுநீரக மோசடி! சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்த குழு பரிந்துரை


பொரளை தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரக மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு மேற்படி வைத்தியசாலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்த பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்தும் குழு பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்திய சிறுநீரக மோசடி! சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்த குழு பரிந்துரை | Selling Kidneys Private Hospital In Colombo

சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவிப்பு

குறித்த வைத்தியசாலைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குறித்த வைத்தியசாலையினால் சமர்ப்பிக்கப்பட்ட நீதிப்பேராணை மனு நேற்று (4.05.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்டமா அதிபர் குறித்த விடயத்தை மன்றுரைத்துள்ளார்.

முன்னதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அந்த வைத்தியசாலையில், சிறுநீரகங்களை மாற்றுதல் மற்றும் சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.