அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் அனைவரிடமும் நட்பாகவும் நெருக்கமாகவும் பழக்ககூடிய ஒரு சில மனிதர்களில் மனோபாலாவும் ஒருவர். அதன் காரணமாகவே தான் அவரின் பிரிவை யாராலும் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நேற்று மனோபாலா உடல்நலக்குறைவால் காலமான செய்தியை கேட்ட அனைவரும் உச்சகட்ட சோகத்தில் இருக்கின்றனர். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்ட மனோபாலா ஒரு சிறந்த மனிதராகவும் இருந்துள்ளார்.
Manobala: மனோபாலாவின் வாழ்நாள் ஆசை இதுதானாம்..கடைசிவரை நிறைவேறாமலே போய்விட்டதே..!
உதவும் மனப்பான்மை, அனைவரிடமும் மிகவும் எளிமையாக பழக்கூடிய குணம் என இவை அனைத்தும் பொருந்திய மனோபாலா பிரிவை எண்ணி ஒட்டுமொத்த திரையுலகமே சோகக்கடலில் ஆழ்ந்துள்ளது. நேற்று காலமான மனோபாலாவின் உடலுக்கு திரைபிரபலங்கள் முதல் சினிமா ரசிகர்கள் வரை அனைவரும் நேரிலோ அல்லது சமூகத்தளங்களின் மூலமே தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் நேற்று மனோபாலாவிற்கு நேரில் சென்று நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்தார். விஜய்யுடன் துப்பாக்கி, நண்பன் உள்ளிட்ட பல படங்களில் மனோபாலா இணைந்து நடித்துள்ளார். மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் நடித்துள்ளார் மனோபாலா.
இதையடுத்து சினிமா வட்டாரத்தை சார்ந்த அனைவரிடமும் நெருங்கி பழகும் மனோபாலா விஜய்யுடனும் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளார். விஜய்யும் மனோபாலாவிடம் ஓப்பனாக பல விஷயங்களை பேசியுள்ளாராம். அவ்வாறு விஜய் மனோபாலாவிடம் பேசிய ஒரு விஷயம் தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.
அதாவது விஜய்யின் ஐம்பதாவது திரைப்படமான சுறா கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் அந்த காலத்திலேயே பல ட்ரோல்களையும் சுறா திரைப்படம் சந்தித்தது. இந்நிலையில் ஒருமுறை மனோபாலா விஜய்யிடம், சுறா போன்ற ஒரு படத்தில் ஏன் நடித்தீர்கள் என கேட்டாராம்.
அதற்கு விஜய், நான் சுறா படத்தின் கதையை கேட்டபோது எனக்கு மிகவும் பிடித்தது. இயக்குனர் அந்த அளவிற்கு என்னிடம் சுறா கதையை கூறினார். ஆனால் படம் அதற்கு நேர் மாறாக இருந்தது. நம்பி ஏமாந்துட்டேன் சார் என விஜய் மனோபாலாவிடம் ஓப்பனாக பேசியுள்ளாராம்.
இதனை மனோபாலா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இவ்வாறு பல நடிகர்களுடன் நெருங்கி பழகிய மனோபாலாவின் பிரிவு அனைவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.